“மசூதிகளையெல்லாம் கல்வி நிறுவனங்களாக்குங்க, மதம் என்பது வீட்டிற்குள்ளே வைத்துகொள்ளுங்கள்” என்று புரட்சி முழக்கம் எழுப்பிய முஸ்தபா கமால் பாட்சா நினைவு நாள்.
முஸ்தபா கெமால் அட்டாதுர்க் என்று அழைக்கப்பட்ட முஸ்தபா கமால் பாட்சா துருக்கியின் இராணுவ அதிகாரி, புரட்சிகர பகுத்தறிவு சிந்தனை கொண்ட அரசியல்வாதி, நவீன துருக்கியை உருவாக்கிய சிற்பியுமாவார்.
அவர் 1923 முதல் 1938 இல் இறக்கும் வரை துருக்கியின் முதல் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர் துருக்கியை நவீனமயமாக்கி, நவீன குடியரசு நாடாக மாற்றினார்.
சீர்திருத்தங்கள் பழமை வாதத்தில் மூழ்கியிருந்த துருக்கியை 15 ஆண்டுகளுக்கு முழுமையான பகுத்தறிவு மற்றும் நவீன சிந்தனைக்கு இலக்கான ஒரு நாடாக மாற்றினார்.
மதம் மற்றும் நம்பிக்கை எல்லாம் அவரவர்கள் வீட்டிற்குள்ளே பொதுவெளியில் நமது நாட்டின் வளர்ச்சி தான் முக்கியம் என்று கூறிய அவர் பல்வேறும் வழிபாடுத்தலங்களை உயர்கல்வி நிறுவனங்களாகவும் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் மாற்றியதால் அந்த நாடு மேலை நாடுகளோடு வளர்ச்சியடைந்த யுரோசியாவின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது, மேலும் இஸ்லாமிய நாடு என்று முத்திரையில் இருந்து சோசலிச நாடு என்ற பெயரையும் பெற்ற நாடாக மாற்றியதில் கமால் பாட்சாவின் உழைப்பு முழுமையாக இருந்தது இதனால் இவர் “துருக்கியின் தந்தை” என்று பொருள்படும் “அட்டாதுர்க்” என்ற பட்டத்தை பெற்றார்.
