பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு தாட்கோ நிறுவனத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகள்

2 Min Read

நீலகிரி, நவ.9 சமூக நீதியையும், அனைவருக்கும் சமமான வாழ்க்கைத் தரத் தையும் உறுதி செய்வதே ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில், தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல் படுத்தி வரும் “தொல்குடி” திட்டம் ஒரு முக்கிய மான மைல்கல்லாகப் பார்க் கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடி மக்களின் மிக அடிப்படைத் தேவையான பாதுகாப்பான, நிரந்தரமான வீடுகள் அமைத்துத் தரப்படுகின்றன. இப்பணியை தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஏற்றுக் கொண்டுள்ளது. 1979 வரை ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீடுகளைக் கட் டித் தந்தது. 45 ஆண்டு இடை வெளிக்குப் பிறகு, மீண்டும் பழங்குடியினருக்கான வீட்டு வசதித் திட்டத்தை, தொல்குடி திட்டத்தின்கீழ் தாட்கோ முன்னெடுத்துள்ளது.

பழங்குடி மக்களுக்கான வீடுகளின் தரத்தையும் மேம்பாட்டையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். கட்டுமான செலவைக் குறைக்கும் வகையில் தாட்கோ மூலமாகவே சுட்டுநர்கள் நியமனம், கம்பி, சிமெண்ட், கதவுகள், ஜன்னல்கள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் நவீன பயோ செப்டிக் டேங்க் உள்ளிட்ட அனைத்தும் மிகக் குறைந்த விலையில் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, கட்டுமானப் பணியிடங்களுக்கே நேரடியாக வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தின்கீழ், நரிக்குறவர் மற்றும் பிற பழங்குடியினருக்கான வீடுகள், கள்ளக்குறிச்சி (கல்வராயன் மலை), திருவண் ணாமலை (ஜவ்வாது மலை) மற்றும் நீல கிரி போன்ற கடினமான மலைப் பகுதி களில் கட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில், வாகனப் பாதை அற்ற ஒத்தையடிப் பாதைகள் வழியாகவே கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

தொழிலாளர்கள், பொருட்களைச் தலைச் சுமையாகவும், இழுவைக் கயிறுகள் மூலமாகவும் மிகுந்த சிரமங்களுக்கிடையே அதிக உயரத்துக்குக் கொண்டு செல்வது போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாட்கோ இந்தப் பணியை அர்ப்பணிப்புடன் செய்கிறது. முதல் தொகுதியில் அனுமதிக்கப்பட்ட 1,500 வீடுகளில் 1,250 வீடுகளில் 1,000 வீடுகள் ஏப்.14 அன்றும், 250 வீடு கள் அக்.6 அன்றும் முதலமைச்சரால் பயனாளி களிடம் வழங்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *