சென்னை, நவ.9 விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி (TAEI Registry 2.0) பயன்பாட்டை, சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சென்னையில் நேற்று (8.11.2025) தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது: தமிழ்நாடு விபத்து மற் றம் அவசர மருத்துவமுன் னெடுப்பு திட்டமானது, அடுகரித்து வரும் அவசர கால நோய் மற்றும் இறப்பு களைக் கட்டுப்படுத்தும் வகையில், அவசர மருத் துவ சிகிச்சையை நிறை வேற்றுகிறது.
தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள் மற்றும் 5 சார்ந்த மருத்துவமனை கள், 31 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் 41 துணைமாவட்ட மருத் துவமனைகள் என 113 டி.ஏ.இ.அய். மய்யங்களிலும் நவீன வசதியுடன் தேவை யான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உபகரணங்கள் மற்றும்மனிதவளத்துடன் அவசரசிகிச்சை பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு அவசர மருத்துவத்துறை உருவாக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு, தீக்காயம், விஷக்கடி விஷமுறிவு, குழந்தை நலவாழ்வு மற் றும் அவசர மேலாண்மை, விபத்து மற்றும் காயங் கள்,பக்கவாதம் எதூண் களைஉள்ளடக்கியுள்ளது. டிஏஇஅய் மய்யங்களில் சிகிச்சை பெறும் நோயாளி களின் தரவுகளைச் சேகரிக்க, புதியதாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் கணினி மற்றும் தொலை பேசியில் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு 108 அவசரகால ஊர்தி வாக னத்தில் வழங்கப்படும் சிகிச்சைமுறைகள்மற்றம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. இது நோயாளிகளின் தரவுகளின் அடிப்படை யில் சிகிச்சை தரத்தை மேம் படுத்தவும் மற்றும் வழி முறைகளின் அடிப்படை யில் சிறப்பான சிகிச்சை வழங்கவும் வழி வகுக்கும்.
இப்போது 113 மருத்துவ மனைகளில் விபத்து, அவ சர சிகிச்சை செயலி டிஏஇஅய் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
