சென்னை, நவ.9– சென்னை அசோக்நகர், டாக்டர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் 13 வாரமாக 484 முகாம்களில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 168 பேர் பயனடைந்துள்ளனர். இந்த முகாமில் கட்டணமின்றி முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
இந்த திட்ட முகாம் மூலம் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரியும் 250 தொழிலாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று (18.11.2025) 14-ஆவது வாரமாக நடைபெற்ற முகாமில் 64 ஆயிரத்து 224 பேர் பயனடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
