சென்னை. நவ. 9– ‘வங்கிகளை தனியார் மயமாக்குவது தேச நலனை பாதிக்காது’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்ப தாவது:
வங்கிகளை தேசிய மயமாக்கியதன் நோக்கங்கள் முழுமையாக எட்டப்படவில்லை என்றும், எதிர்பார்த்த பலன்களை கொடுக்க வில்லை என்றும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது வேதனைக்குரியது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், கடந்த 1969 ஆம் ஆண்டு 14 வங்கிகளை தேசியமயமாக்க எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனவே தவிர, தனியார் வங்கிகள் அல்ல.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துப் பேசுவது, பொதுத்துறை வங்கிகளை தனியார் துறைக்கு தாரை வார்க்கும் திட்டமிட்ட முயற்சியாகவே தெரிகிறது.
இது தேச நலனைப் பாதிக்கும். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.
