தூத்துக்குடி, நவ. 9– “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்அய்ஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
எஸ்.அய்.ஆர்
இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறும்போது:
“எஸ்அய்ஆர் (SIR) நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இதனை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து சரியாக அமல் படுத்தியிருக்க முடியும்.
ஆனால், பீகாரிலும் நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராட்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது. ஜனநாயகத்தை கொலை செய்யக் கூடிய ஒரு முயற்சிதான் இந்த எஸ்அய்ஆர்.
தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல பிரச் சினைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக் கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தான் திமுகவும், கூட்டணி கட்சிகளும் இணைந்து ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
