டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவிலும் கோயில் தேர் போகணும்… நீதிபதி அதிரடி உத்தரவு! ‘பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியே தேர் செல்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காந்தியார் அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ம.பி. பாஜக ஆட்சியில் மதிய உணவு காகித துண்டில் பரிமாறிய அவலம்: மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு காகித துண்டுகளில் மதிய உணவு பரிமாறப்பட்டது: பாஜகவின் ‘வளர்ச்சியின் மாயை’ என்று ராகுல் கண்டனம்.
தி இந்து:
* ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுகதான். இனி இப்படி ஓர் இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. வரலாறு தெரியாதவர்கள் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுகவைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி டெலிகிராப்:
* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
* ‘மோடி அரசாங்கத்திற்கு பரிவர்த்தனை செய்ய எந்த வேலையும் இல்லை, எந்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை, எந்த விவாதங்களும் அனுமதிக்கப்படக்கூடாது’ என காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காட்டம்.
* வந்தே பாரத் ரயிலில் ஆர்எஸ்எஸ் பாடல்: தெற்கு ரயில்வேயின் செயல் “மிகவும் வருந்தத்தக்கது” மற்றும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகை சீட்டு: அலட்சியமாக செயல்பட்டதற்காக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அதிகாரி (ஏஆர்ஓ) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
– குடந்தை கருணா
