உலகச் செய்திகள்

3 Min Read

நீரிழிவு – இதய நோய் முதலிய
நோய் உள்ளவர்களுக்கு
அமெரிக்கா விசா கிடையாதாம்

டிரம்ப் நிர்வாகம் உத்தரவு

நியூயார்க், நவ. 9– அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவின் எச்1-பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக  (1 மில்லியன் டாலர்கள்) உயர்த்தி அறிவித்தார். இது அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு ‘கிலி’யை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் எச்1-பி விசா நடைமுறையில் உள்ள விதிமீறல்கள் குறித்து விசாரிக்க டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனிடையே அமெரிக்கா செல்ல எச்1-பி விசாவுக்கு விண்ணப்பிப்போரில் நீரிழிவு நோய், இதய நோய், உடல் பருமன் உள்ளிட்டவர்களை நிராகரிக்க டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புற்றுநோய், சுவாச கோளாறு, மனநலம் சார்ந்த பிரச்சினைகள், நரம்பியல் பிரச்சினைகள் உள்ளோருக்கும் விசா வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 10 மாதங்களில்
80,000 விசாக்கள் ரத்து

வாசிங்டன், நவ. 9– அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றதில் இருந்து இதுவரை, 80,000க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றார். குடியேற்றம் தொடர்பாக பல கடுமையான கட்டுப்பாடுகளை அவர் அறிவித்தார். விசாக்களுக்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும், மாணவர், சுற்றுலா, தற்காலிக பணிக்காக வரும் குடியேற்றம் அல்லாத, 80,000க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார். இதில் பாதிக்கும் மேற்பட்டவை, மூன்று முக்கிய காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,000 விசாக் களும், தாக்குதல் போன்ற காரணங்களுக்காக 12,000 விசாக்களும் மற்றும் திருட்டு வழக்கில் சிக்கிய காரணத்தால் 8,000 விசாக்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

மேலும், காலாவதியான மற்றும் சட்ட மீறல்களுக் காக 6,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பள்ளி வளாகத்தில் அமைந்திருந்த மசூதியில் குண்டு வெடிப்பு 54 பேர் படுகாயம்!

இந்தோனேஷியாவில் அதிர்ச்சி

ஜகார்த்தா, நவ. 8– இந்தோனேஷியாவில் பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 54 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகை யில், “எங்களுக்கு கிடைத்த ஆரம்ப தகவலின்படி, சுமார் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்கு மிதமான காயங்களும் உள்ளன. சிலர் சிகிச்சை பெற்று வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், வெடிப்பு நடந்த இடத்தில் உடல் கவசம், துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் போன்ற பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது” என்று கூறியுள்ளனர்.

வியட்நாமை புரட்டி போட்ட ‘கல்மேகி’ புயல்: 5 பேர் பலி; 2,600 வீடுகள் சேதம்

டக் லக், நவ. 9– வியட்நாமில் பந்தாடிய கல்மேகி புயலுக்கு 5 பேர் பலியாகி விட்டனர். 2,600 வீடுகள் சேதமடைந்தன. பிலிப்பைன்சில் ‘கல்மேகி’ புயலுக்கு 188 பேர் உயிரிழந்தனர். 135க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

இந்நிலையில் ‘கல்மேகி’ புயல் 6.11.2025 அன்று இரவு வியட்நாம் நாட்டை நோக்கி நகர்ந்தது. வியட்நாமை நெருங்கும்போது, தென்சீனக் கடலில் மணிக்கு 220 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்ததால், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ள நீரில் மூழ்கின. குவாங் நகாய் மற்றும் கியா லாய் மாகாணங்களுக்கிடையே கரையை கல்மேகி புயல் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றன. புயல் பாதிப்பு குறித்து வியட்நாம் வானிலை மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கல்மேகி புயலுக்கு 5 பேர் பலியாகி விட்டனர். 8 பேர் மாயமாகி உள்ளனர். 52 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மொத்தமாக 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *