சிவகாசி, நவ. 9– இராஜபாளையம் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் வானவில் வ.மணி இன்று (9.11.2025) காலை 6 மணியளவில், சிவகாசி வானவில் இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார்.
செய்தி அறிந்து தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி, விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், இராசை மாவட்டத் தலைவர் பூ.சிவகுமார், செயலாளர் இரா.கோவிந்தன், பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, ப.க. அமைப்பாளர் மா.பாரத், துணைச் செயலாளர்கள் இரா.அழகர், ச.சுந்தரமூர்த்தி, அருப்புக்கோட்டை க.எழிலன், இராசை இரா.பாண்டிமுருகன், சிவகாசி மாநகரத் தலைவர் மா.முருகன், செயலாளர் து.நரசிம்மராஜ், அமைப்பாளர் பெ.கண்ணன், திருத்தங்கல் மா.நல்லவன், இளைஞரணித் தோழர் மு.ஜீவாமுனீஸ்வரன் மற்றும் தோழர்கள் அன்னாரது இல்லம் சென்று கழகக் கொடி போர்த்தி, மலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார். மதியம் 12 மணி யளவில், அவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை அருகில், தேவனாம்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. நாளை (10.11.2025) காலை 11 மணியளவில், தேவனாம்பட்டு இல்லத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.
