சென்னை, நவ. 9– தி.மு.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில், ‘ஒன் டூ ஒன்’ முறையில் தொகுதி நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆலோசித்து வருகிறார். இந்தச் சந்திப்புகளின்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கிய இந்தச் சந்திப்பில், இதுவரை 79 சட்ட மன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, 80ஆவது தொகுதியாக ஓசூர் தொகுதி நிர்வாகிகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.11.2025) சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, வர விருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தற்போதைய தொகுதியின் வெற்றி நிலவரம் ஆகியவை குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்றும், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக் குப் பாடுபட வேண்டும் என்றும் நிர்வாகி களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
முக்கிய அறிவுறுத்தல்: “கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும்” என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
எஸ்.அய்.ஆர். (SIR) பணிகளில் உள்ள குழப்பங்கள் காரணமாக லட்சக் கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதால், வாக்காளர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்த நிர்வாகிகள் சந்திப்பின்போது முன்வைக்கப்படும் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தீர்வு கண்டு வருகிறார். இதற்குச் சான்றாக, நேற்று (8.11.2025) நடந்த சந்திப்பில் ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படவில்லை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டவுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை உடனடியாக அறிவாலயத்துக்கு அழைத்து முதல மைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அனைத்து மண்டலப் பொறுப் பாளர்களும் பிரச்சினைகளைப் பின்பற்றி (பாலோஅப்) அறிக்கை (ரிப்போர்ட்) அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
