கண்ணந்தங்குடி கீழையூரில் த.அம்சுஅம்மாள் படத்திறப்பு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்

2 Min Read

உரத்தநாடு, நவ. 8- உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.செகநாதன், தஞ்சை அன்பு மெஸ் உரிமையாளர்கள் த.குமார், த.இரமேசு ஆகியோரின் தாயார் த.அம்சுஅம்மாள் கடந்த மாதம் 18.10.2025 அன்று மறைவுற்றார்.

அம்மையாரின் படத்திறப்பு

அம்சு அம்மையாரின் படத்திறப்பு நிகழ்வு நிகழ்வு 7.11.2025 அன்று காலை  11மணிக்கு உரத்தநாடு கண்ணந்தங்குடி கீழையூரில் நடைபெற்றது.கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமை வகித்தார்.கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் படத்தினை திறந்து வைத்து உரத்தநாடு த.செகநாதனின் தொண்டறப்பணிகளை எடுத்துக் காட்டியும், தந்தை பெரியார் சிலை அமைப்பதற்கு ஏற்பட்ட எதிர்ப்பை முறியடித்து தமது சொந்த இடத்தில் சிலையமைக்க வாய்ப்பளித்த பெற்றோர்களின் பெருந்தன்மையை பாராட்டியும்,  சகோதர சகோதரி கள் அனைவரும் சுயமரியாதைத்  திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருவதையும்,அவர்களது பிள்ளைகள் வழக்குரைஞர், மருத்துவர், பல்துறைபடிப்பில் உயர்ந்து நிற்பதையும் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

ஒன்றியத் தலைவர் செகநாதனை பொறுத்தவரை தமிழர் தலைவர் அவர்களைப்பற்றி யார் இழிவாக, தவறாகப் பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கொடுக்க தயங்காதவர் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். ஒழுக்கத்தோடும்,நாணயத்தோடும், உழைப் பால் உயர்ந்ததற்கு அடிப்படையாக விளங்கிய அவரது பெரியப்பா, பெரியம்மா,பெற்றோர்களுக்கு நன்றியும்  வீர வணக்கத்தையும்  தெரிவித்துக் கொண்டார்.

திராவிடர் கழகம்

நிகழ்வில் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.செயக்குமார்,மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, அதிமுக துரை,உரத்தநாடுவர்த்தகசங்கத் தலைவர் மணிசுரேசு, காவல்துறை ஆய்வாளர் கமலவேணி, ஒன்றியக்குழு மேனாள் உறுப்பினர்  சரவணன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம்,பண்பாளர் மா.தவமணி, ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.

அதிமுக மத்தியமாவட்டச்செயலாளர் மா.சேகர், கழக காப்பாளர் மு.அய்யனார், பட்டுக்கோட்டை மாவட்டத்தலைவர் பெ.வீரையன், மாவட்டச் செயலாளர் மல்லிகை சிதம்பரம், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன், மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர் கபடி.நா.இராமகிருட்டிணன் பெரியார் சமூகக் காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி. திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில ப.க.அமைப்பாளர் கோபு.பழனிவேல். பொதுக் குழு உறுப்பினர் வடசேரி தீ.வ.ஞானசிகாமணி, பேராவூரணி. இரா.நீலகண்டன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் நெல்லுப்பட்டுஅ.இராமலிங்கம், தஞ்சைதெற்குஒன்றிய தொழிலாளரணிதலைவர் அழகு ஆ.இராமகிருட்டிணன்,உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு , தஞ்சை மாநகரதலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார். பெரியார் வீரவிளையாட்டுக்கழக பொறுப்பாளர் பொறியாளர் ப.பால கிருட்டிணன்உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

பட்டுக்கோட்டை மாவட்டத்தலைவர் பெ.வீரையன் விடுதலை சந்தா வழங்கினார் உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் நெடுவை.குநேரு விடுதலை சந்தா வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *