தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கின் மேனாள் முதல்வரும், தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) இந்நாள் இணைவேந்தருமான மல்லிகா அவர்களின் அன்னையார் இரா.அம்மா பொண்ணு அவர்கள் (வயது 87) வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்று அறிவிக்க வருந்துகிறோம். சொந்த ஊரான திருநெல்வேலிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
