கோவை, நவ. 8- இந்திய மருந்தியல் கூட்டமைப்/ (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சு போட்டியின் மாநில சுற்று (“Digital Health Revolution: Pharmacy in the Tech Age”) கோயம்புத்தூர் சிறீஇராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் 05.11.2025 அன்று நடை பெற்றது.
இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி ப. அய்ஸ்வர்யா கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்து. ரூபாய் 750/- பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பரிசு வென்ற மாணவியை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
