ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: “வழக்குகள் போட்டால் எதிர்கொள்வேன், எனது குற்றச்சாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” என்று அண்ணாமலை கூறுகிறாரே?                            – க.ராஜா, திருவண்ணாமலை

பதில் 1 : வழக்குகள் போட்டால் – இவரென்ன – எவரானாலும் எதிர்கொள்ளாமல் ஓடி விட முடியாது. இது ஒரு பதிலா? வெறும் வாய்ச்சவடால்!

கேள்வி 2: எதிர்காலத்தில் 80 விழுக்காடு ‘செயற்கை நுண்ணறிவு’ பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள். அப்போது மனித ஆற்றல் எப்படி செலவாகும்?                                                           – மு.திருநாவுக்கரசு, திருத்தணி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 2 : வளர்ச்சியும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும், கேடுகளின் அச்சுறுத்தலும் மனித குலத்தின் சவாலாக இருக்கின்றன!

கேள்வி 3: “விலைவாசி உயர்வு குறித்து எனக்கும் கவலைதான்” என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?

                                                                                             – தெ.மாரியப்பன், நெல்லை

பதில் 3 : கட்டுப்படுத்த வேண்டியவருக்கே கவலை வந்துவிட்டது என்றால் நிலைமை கட்டுமீறி விட்டது என்றுதானே பொருள்?

—-

கேள்வி 4: வாக்குப்பதிவு அன்று கோவில்களில் பிரதமர் மோடி வழிபாடு செய்வதை தொடர் நேரலையாக அனைத்துத் தொலைக் காட்சிகளும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்கின்றனவே?          – ப.அருணாசலம், ஒசூர்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 4 : ஓட்டு வாங்க இப்படி ஓர் ‘உத்தி’. கருநாடகத் தேர்தலை மனதிற்கொண்டு சூடானில் ‘ஆபரேசன் காவிரி’? வந்த மாதிரி!

—-

கேள்வி 5: நீட் தேர்வில்  மொத்தம் 200 கேள்விகளில் 165 கேள்விகள்  தமிழ்நாடு அரசு  பாடப் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டிருக்கிறதே – சமச்சீர்கல்வி எப்படி அவர்களுக்கு இனித்தது?   – ம.கனியமுது, திருச்சி

பதில் 5 : கடைசியில் தமிழ்நாடுதான் எவருக்கும் தஞ்சமோ? வாழ்க ‘திராவிட மாடல்’!

—-

கேள்வி 6: மணிப்பூர் குறித்து இன்றுவரை பிரதமர் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லையே, குறைந்த பட்சம் அந்த மக்கள் அமைதி காக்கவேண்டும் என்று ‘மன் கி பாத்’ போன்றாவது பேசலாமே? அங்கு பா.ஜ.க. பெரும்பான்மை ஆட்சிதானே நடக்கிறது?      – வெ.நடராஜன், மதுரை

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 6 : “மணிப்பூரா? கலவரமா? அதென்ன? விளம்பரத்தில் மங்கி பாத்தான் அடிக்கடி உள்ளது” என்ற நிலைதான்.

கேள்வி 7: வேலையில்லாதோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஒன்றிய பொருளாதார கண்காணிப்பு மய்யம் கூறியுள்ளதே?                                                         – பு.திருவேங்கடம், வியாசர்பாடி

பதில் 7 : ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கிடைத்ததும் அவை பறந்தோடி விடுமே!

கேள்வி 8: தி காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி போன்ற பிரிவினைவாதப் படங்களை சென்சார் எப்படி அனுமதிக்கிறது?

                                                                                     – கி.மாசிலாமணி, மதுராந்தகம்

பதில் 8 : சென்சார் போர்டு யார் வசம்? பிறகேன் இக்கேள்வி?

கேள்வி 9: நீட் தேர்விற்கு தயாராக இருங்கள் என்று மாணவர்களிடம் ஆளுநர் கூறுகிறாரே?                                                             – ச.கணேசன், காஞ்சி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 9 : அவர் ஒரு தனி ராஜ்ய அதிபதி போல – தினசரி விளம்பர ஊடக உதவி உபயம் இது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *