

பெரியார் பன்னாட்டமைப்பும் – ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும் (PATCA) இணைந்து நடத்திய 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு – சுயமரியாதை நூற்றாண்டு விழா கருத்தரங்கம் ஆஸ்திரேலியா – நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் ‘பாராமட்டா’ டவுன் ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர். உடன்: டாக்டர் அண்ணா. மகிழ்நன் (தலைவர், ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்), அரங்க. மூர்த்தி (நான்காவது மனிதநேய சர்வதேச மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவர்), டாக்டர். சோம. இளங்கோவன், (தலைவர், பெரியார் பன்னாட்டு அமைப்பு), ‘புதிய குரல்’ அமைப்பின் தலைவர் ஓவியா, திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன்.



அயலகத் தமிழர் நல வாரியத்தின் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் தயாரித்த “தமிழர் வரலாறு” என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
