அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்!
கடந்த (6.5.2023) ஞாயிறு விடுதலை – கேள்வி-பதில் பக்கத்தில்,
கேள்வி 5 : “அரசியலும், மதமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டால் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்” என நீதிபதி ஜோசப் தெரிவித்துள்ள கருத்துப் பற்றி?
– க.கார்த்திகேயன், ஆண்டிமடம்
பதில் 5 : 100க்கு 200 சதவிகிதம் சரியானதும், தேவையான தருணத்தில் தேவைப்படும் அறிவுரை – நீதிபதியை வெகுவாகப் பாராட்ட வேண்டும்!
இதைப் படித்ததும் எனக்கு ஞாபகம் வந்ததை எழுதுகிறேன்; டாக்டர் அம்பேத்கர் காலத்திலேயே அவர் கூறியிருக்கிறார்.
ஆபத்தான தத்துவம்
“இந்து ராஜ்ஜியம் என்பது உண்மையில் நடைமுறைக்கு வருமேயானால், சந்தேகமின்றி இது நாட்டுக்கு ஏற்படப் போகும் மிகப் பெரிய ஆபத்தாகும். இந்துத் தத்துவம் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு நேர் எதிரானது. எப்பாடு பட்டாகிலும் இந்து ராஜ்ஜியம் தடுத்து நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். மதவாத ராஜ்ஜியத்திற்கு எது வழிவகுக்கிறது? பிற நாடுகளில் இதுபோன்ற பெரும்பாண்மை ராஜ்ஜியம் வருவதை எப்படித் தடுத்தார்கள்? அவர்கள் அரசியலில் மதவாத கட்சிகளை தடை செய்தனர்.” – டாக்டர் அம்பேத்கர்
இவண்,
– ச.இரணியன், திருமுல்லைவாயல்
————————————
இப்படி ஒரு செய்தியா?
முருகரும் – தேவரும்!
சின்னப்பா தேவர் தீவிர முருக பக்தர். ஆனால், அவர் முருகர் கோயிலில் திருடி இருக்கிறார் என்பது தெரியுமா? அவரே சொல்கிறார்:
“”முன்பெல்லாம் கையில் காசில்லாமல் மருதமலைக்கு நடந்தே செல்வேன். ஒருநாள் கோயிலுக்கு வந்த பக்தர், ஓரணா காசை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி சந்நிதானத்துக்கு நேராக வாசல் படி மீது வைத்தார். அவர் போனதும் அந்தக் காசை எடுத்துகொண்டேன். அவ்வப்போது இப்படியே திருடினேன். பின்னர் தவறை உணர்ந்து, முருகனுக்கே செலவு செய்து மகிழ்ந்தேன்’’ என்றார்.
– ‘தினமணி’ மே 07, 2023