டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* டில்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் முடிவு: மொத்தமாக தட்டித்தூக்கிய இடதுசாரிகள். ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு ஏ.பி.வி.பி. அவுட்!
* வாக்காளர் சிறப்புத் திருத்த நடவடிக்கைக்கு எதிராக.. தமிழ்நாடு முழுவதும் நவ. 11இல் ஆர்ப்பாட்டம்! திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* “8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன”.. இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் சொன்ன புது தகவல்! “இந்தியா – பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா, பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்குள் சண்டை வெடித்தது. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என டிரம்ப் அதிரடி பேச்சு.
* மாநிலத்தில் அனைத்து மக்களும் வாக்காளர் படிவத்தை தந்ததற்குப் பின் தான், நான் படிவத்தை அளிப்பேன், மம்தா உறுதி.
* பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், வங்கி தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரியானா குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, பீகாரில் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கும்; பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாட்டில் ‘காட்டு ராஜ்ஜியத்தை’ திணித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
தி இந்து:
* டில்லி, பீகார் தேர்தல்களில் பாஜக தலைவர்கள் வாக்களித்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு. பிப்ரவரியில் டில்லியில் ஒரு குத்து, நவம்பரில் பீகாரில் ஒரு குத்து: 9 மாதங்களில் 2 மாநிலங்களில் வாக்களித்த பா.ஜ.க எம்பி; காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆவேசம்
தி டெலிகிராப்:
* பீகார் இளைஞர்கள் ‘வேலை எங்கே’ கேள்வியை எழுப்புகிறார்கள்: பாட்னாவில் இருந்து கங்கைக்கு அப்பால் உள்ள சோன்பூரில், இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், கடந்த ஆண்டு பீகார் பொது சேவை ஆணையத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு: நான் ஓய்வு பெற்ற பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறதா? அப்படியென்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்கலாமே என்றும் தலைமை நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்து, ஒன்றிய அரசுக்கு மீண்டும் கண்டனம்.
* பொதுக்கூட்டம் நடத்த ரூ.20 லட்சம் டெபாசிட் கட்டணும்.. தமிழ்நாடு அரசின் புதிய நெறிமுறைகள்! தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு டெபாசிட் தொகை வசூலிப்பது,3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்குவது என முடிவு செய்துள்ளதாக சென்னையில் நடந்த அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
* வங்கிகளில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்துங்கள்: ஒன்றிய நிதி அமைச்சர் சீதாராமன். உள்ளூர் மொழித் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மனிதவளக் கொள்கைகளை மாற்றி அமைக்க வங்கிகளை கேட்டுக்கொண்டார்.
– குடந்தை கருணா
