தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நியூயார்க், நவ. 7- தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

ஜி20 உச்ச மாநாடு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நேற்று முன்தினம் (5.11.2025) நடைபெறற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தென் ஆப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இருக்கக் கூடாது. ஏனென்றால் அங்கு நடைபெறும் விஷயங்கள் மிக மோசமானதாக உள்ளன. அதனால், நான் அங்கு செல்லவில்லை. ஜி20 அமைப்புக்கு அடுத்ததாக அமெரிக்கா தலைமை தாங்குகிறது. இந்த கூட்டத்தை மியாமியில் உள்ள எனது கோல்ப் கிளப்பில் நடத்த முன்பு திட்டமிட்டிருந்தேன்.

போரை நிறுத்தினேன்:

இந்தியாவும் – பாகிஸ்தானும் கடந்த மே மாதம் போரில் ஈடுபட்டபோது, 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டால், உங்களுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தை நிறுத்துவேன் என கூறினேன். மறுநாளே இரு நாடுகளும் போரை நிறுத்திக் கொண்டன. இதெற்கெல்லாம் காரணம் வரி தான். இல்லையென்றால் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது. 8 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *