‘ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிகம்’: அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் ஏவுகணைகள் ரஷ்ய அதிபர் புதின்

3 Min Read

ரஷ்யா, நவ. 7- அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கினால், ரஷ்யாவும் அதேபோல் சோதனைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பை பரிசீலிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு சோதனைகள் குறித்த கருத்துகளை வெளியிட்டதையடுத்து, புடின் ரஷ்ய தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தைக் கூட்டினார்.

அணு சோதனைகளுக்கான ஆய்வும் தயாரிப்பும்

இந்த விவகாரம் குறித்த தகவல்களை சேகரித்து, ரஷ்யா அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் பணிகளைத் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து முன்மொழிவுகள் அளிக்கவும் பாதுகாப்புத் துறை, வெளிவிவகார அமைச்சகம், மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றிற்கு புடின் உத்தரவிட்டார்.

புதிய தலைமுறை அணு இயக்கக் க்ரூஸ் ஏவுகணைகள்

ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினில் நடைபெற்ற ஆயுத மேம்பாட்டு நிபுணர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய புடின் “புதிய தலைமுறை அணு இயக்க ஏவுகணைகளின் வேகம் ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில், அவை ஹைப்பர்சோனிக் (Hypersonic) ஆக மாறும்,” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய புடின் ” புதிய ஆயுத அமைப்புகள், பாதுகாப்புத் துறை மேம்பாடு, ரஷ்ய இராணுவம் மற்றும் கடற்படைக்கு உயர் தர ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை வழங்கும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளன. அவாங்கார்ட் (Avangard) எனப்படும் மூலோபாய ஏவுகணை அமைப்பு தற்போது செயல்பாட்டில் உள்ளது. ஒரெஷ்னிக் (Oreshnik) நடுத்தர தூர ஏவுகணை அமைப்பு மொத்த உற்பத்தியில் தொடங்கப்பட்டுள்ளது. அண்டார்காண்டினென்டல் பாலிஸ்டிக் மிசைல்கள் (ICBMs) மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள் ஆகியவற்றிலும் மேம்பட்ட போர்த்தலைகள் பொருத்தப்பட்டுள்ளன.” என்று கூறினார்..

அணு ஆயுத விஞ்ஞானிகளுக்கு விருதுகள்

ரஷ்யாவின் அணு சக்தி வாய்ந்த Burevestnik ஏவுகணை, பொசெய்டன் (Poseidon) மனிதமற்ற நீர்மூழ்கி வாகனம் (unmanned underwater vehicle) இவற்றை உருவாக்கிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு புடின் விருதுகளை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர் “இந்த அணு திறன் கொண்ட ஆயுதங்கள் ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, முழு 21ஆம் நூற்றாண்டிற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. Burevestnik – உலகின் சக்திவாய்ந்த ஏவுகணை ஆகும்.. இதுதிறன்களை நிரூபித்துள்ளது.

அதன் பறக்கும் தூரம், உலகில் அறியப்பட்ட எந்த ஏவுகணை அமைப்பையும் மீறியுள்ளது.. அக்டோபர் 21 அன்று Burevestnik சோதனை நடந்த பகுதியில் ஒரு நேட்டோ கப்பல் இருந்தது. ஆனால் ரஷ்யா அதன் செயல்பாடுகளில் தலையிடவில்லை,” என்று புடின் குறிப்பிட்டார்.

Poseidon & Khabarovsk – புதிய கடற்படை சக்திகள்

Burevestnik-க்கு அப்பால், ரஷ்யா சமீபத்தில் பொசய்டன் (Poseidon) எனும் அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி ட்ரோனை சோதனை செய்தது. மேலும் Khabarovsk எனும் புதிய அணு நீர்மூழ்கிக் கப்பலையும் அறிமுகப்படுத்தியது – இது Poseidon ஆயுதங்களை ஏவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

Poseidon ட்ரோன் அமைப்பு, மிக ஆழமான நீரில் இயங்கும் திறன், நவீன டார்பிடோக்களை விட அதிக வேகம், மற்றும் அண் டார்காண்டினென்டல் தூரங்களை கடக்கக்கூடிய திறன் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அமெரிக்கா அணு சோதனைகள் மீண்டும் தொடங்கினால் மட்டுமே, அதேபோல நடவடிக்கை எடுக்கலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.. அதே நேரத்தில், புதிய தலைமுறை அணு இயக்க ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மற்றும் ட்ரோன் ஆயுதங்கள் ஆகியவற்றில் மிகுந்த முன்னேற்றம் எட்டியுள்ளது. இந்த ஆயுதங்கள் ரஷ்யாவின் 21ஆம் நூற்றாண்டுக்கான பாதுகாப்பு அடையாளம் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *