தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி வேலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய உரை Periyar Vision OTT இல் அமெரிக்காவுக்கு முன்பே பெண்களுக்கு ஓட்டுரிமை – நீதிக்கட்சி, என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் கூறுகிறது. அப்படிச் சொன்னது கதவைத் திறந்து உள்ளே வா என்பதற்காக. ஆனால் நம் நாட்டில் தட்டினாலும் திறக்காது; தள்ளியே நில் என்பது ஆரியம்; கிட்ட வா என்பதுதான் திராவிடம். நவ நாகரீக வளர்ச்சி பெற்ற அமெரிக்காவில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் 1923இல் நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது மட்டுமல்லாமல் சொத்துரிமை அளிப்பதற்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது. 1927 க்கு முன்பு வரை காந்தியார் மயிலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டில் தான் தங்குவார். காந்தி வைசிய ஜாதி என்பதால் அவருக்கும் அவருடைய மனைவி கஸ்தூரி பாய்க்கும் அய்யங்கார் வீட்டின் உள்ளே அனுமதி இல்லை. அவர்கள் வீட்டின் திண்ணையில்தான் தங்க வேண்டும். கஸ்தூரி பாய்க்கு அய்யங்காரின் சமையல்கட்டில் கூட அனுமதி கிடையாது. நீதிக்கட்சி ஆட்சியில் தான் இந்த நிலைமை மாறியது.
கோயில் தர்மகர்த்தா, கோவில் நிலம், கட்டடம், பெரிய மணி வைத்தது, அதை அடிப்பது எல்லாமே நம்ம ஆளாக இருந்தாலும் கையில் ஒரு சின்ன மணியை ஆட்டிக்கொண்டு கர்ப்ப கிரகம் உள்ளே போகிற உரிமை நம்ம ஆளுக்கு இல்லை. 69 சதவீத இட ஒதுக்கீடு ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதற்காக ஒரு கண்காணிப்பு குழு திராவிடம் மாடல் ஆட்சியின் முதலமைச்சரால்தான் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்து மாணவர்கள் ஏழை எளியவர்கள் தமிழ் படித்தவர்கள் மெட்ரிக் படித்தவர்கள் இவர்களுக்கு எல்லாம் எதிரானது தான் நீட் தேர்வு என்பதை புள்ளி விவரங்களோடு ஜஸ்டிஸ் ஏ கே ராஜன் தலைமையில் மருத்துவர்கள் கல்வியாளர்கள் அடங்கிய குழு நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கை வழங்கியது. நாடு முழுவதும் ஒரே கல்வி ஒரே பரிட்சை ஒரே கலாச்சாரம் ஒரே மொழி என்று பேசுகின்ற ஒன்றிய அரசு நாடு முழுவதும் ஒரே ஜாதி என்று சொல்ல முடியுமா.?
ஜாதியை காப்பாற்றுவது மட்டுமே அவர்களின் முக்கிய வேலை. திராவிட ஆட்சியில் தான் மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரிகள் மட்டுமல்ல மருத்துவ உயரப் படிப்புகளான எம்டி எம்எஸ் எம்சிஎச் எம் எல் போன்ற முதுநிலை படிப்புகளும் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்று அருமையாக பேசிய உரையை கேளுங்கள்.
K ராமலிங்கம்
திருவேற்காடு
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com
