வரதராஜ பெருமாள் என்ன செய்கிறார்? காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கப்பல்லியை காணவில்லை என புகார்!

2 Min Read

காஞ்சிபுரம், நவ.7  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள ‘தங்கப் பல்லி’ காணாமல் போய் விட்டதாக பக்தர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தங்கப்பல்லி

காஞ்சி வரதராஜர் கோயிலில், பக்தர்களால் தோஷ நிவர்த்திக்காகத் தொட்டு வணங்கப்படும்   ‘தங்கப் பல்லியைக் காணவில்லை என்று  சிறீரங்கத்தைச் சேர்ந்த பக்தர் சமீபத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் தீவிர விசா ரணை நடத்தினர்.

அப்போது கோயில் நிர்வாகம் சார்பில், பல்லி இருந்த இடத்தில் பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், தெற்குப் பகுதியில் பல்லி இடமாற்றம் செய்யப் பட்டதாக விளக்கம் அளிக் கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திவிட்டுச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அங்கி ருந்து புறப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்துக் கோயில் நிர்வாகத் தின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் அளித்த விளக்கம்: ‘பக்தர்களிடையே தங்கப் பல்லி’ என்று அழைக் கப்படுவது உண்மையில் பித்தளையால் செய்யப் பட்ட பல்லிச் சிற்பம்தான். பித்தளைப் பல்லி, வெள் ளிப் பல்லி, சூரியன், சந் திரன், சக்கரம் ஆகியவை சேர்ந்தது ஒரு செட் ஆகும்.

கோயிலில் இதுபோல் மொத்தம் மூன்றுசெட்கள் உள்ளன. இதில் ஒரு செட் நூற்றாண்டுக்கும் மேல் பழமையானது. ஆனால் அது மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததால் தற்போது பயன்பாட்டில் இல்லை. தற்போது பயன்பாட்டில் இருப்பது, 1970-ஆம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியால்  அளிக்கப்பட்ட செட் ஆகும். இதுவும் காலப் போக்கில் சேதமடைந் துள்ளது.

இதையடுத்து, 2012-ஆம் ஆண்டு ஒரு பக்தர் நன்கொடையாக அளித்த புதிய செட்டை வைக் கலாமா என்று தான் கோயில் நிர்வாகம் சார்பில் ஆலோசனையே செய்யப்பட்டது. பல்லிச் சிற்பங்கள் மாற்றப்பட வில்லை.பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் பல்லிச் சிற்பங்கள் பழைய இடத்திலேயே மீண்டும் வைக்கப் படும். புகார் எழுந்ததையடுத்து, எங்களிடம் இருக்கும் பல்லிச் சிற் பங்களை சிலை கடத்தல் தடுப் புப் பிரிவினரிடம் காட்டி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள் ளோம்’’ என்றார்.

நடவடிக்கை

இதுதொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தி யாளர்களிடம் கூறும் போது, “காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் கோயிலில் தங்கப் பல்லி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். இதுகுறித்த விளக்கத்தை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அறிக் கையாக அளிப்பார்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *