சென்னை, நவ.7- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு ஆகியோர் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், உடல் உறுப்பு கொடையாளர்களை போற் றும் தியாகச்சுவரை திறந்து வைத்தனர். மேலும், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் நார்தன் ஏஆர்சி கேபிடல் சார்பில் ரூ.87.76 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய ஆம்புலன்சுகள் 108 சேவையின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதுதவிர, சென்னை மருத்துவக்கல்லூரி மேனாள் மாணவர்கள் தலைமை அலுவலகத்தையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதுபோன்று தியாகச்சுவர் கட்டப்பட விருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், சென்னை மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் டாக்டர் சாந்தாராமன், தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் கார்த்திகேயன், செயற் பொறியாளர் அழகிரிசாமி. மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் உயர் அலுவ லர்கள் உடனிருந்தனர்.
