சென்னை, நவ.7– நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு 10 வகையான போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் ரீல்ஸ் மற்றும் கட்டுரை. ஓவியங்களை டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
நலம் காக்கும் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ள தாவது:-
நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் ஆகஸ்டு 2-ஆம் தேதி முதல் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்தும், மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ள பொதுமக்கள் பங்கு பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மய்யம் 10 வகையான சிறப்புப் போட்டிகளை நடத்தவுள்ளது”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் வாயிலாக, தமிழ் நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள 1,256முகாம்கள் வழியாக ஏழை-எளிய மக்களுக்குக் கட் டணமின்றி மருத்துவச் சேவைகள் வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஊடக மய்யம்
அதிநவீன பரிசோதனை வாயிலாக நோய்களைக் கண்டறிந்து உடனடியாகக் கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதே இதன் நோக்கம். இதுவரை 407 முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 37 ஆயிரத்து 89 பேர் முழு உடல் பரிசோதனை செய்துள்ளனர்.இந்த முகாம்கள் பிப்ரவரி 2026 வரை ஓராண்டுக்கு, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மய்யம் இப்போட்டிகளை நடத்துகிறது.
போட்டிகள்-விவரம்
உயிர்காத்த முகாம் – உங்கள் உண்மை அனுபவத்தைப் பகிருங்கள். ஒரு நிமிட ரீல்ஸ், உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை கட்டுரை வடிவில் ஒரு பக்கத்தில் எழுதலாம். ஆரோக்கியத்தின் திருவிழா- ஒளிப்படப் போட்டி, உண்மைக்கு உயிர்கொடு – குறும்படப் போட்டி, வரிகள் பேசட்டும்- விழிப்புணர்வு முழக்கம், அறிவோடு விளையாடு, வினாடி வினா போட்டி. பாரம்பரியமும், ஆரோக்கியமும் – சமையல் போட்டி. எண்ணங்களும், வண்ணங்களும் -ஓவியப்போட்டி, கருபொருள் ஆரோக்கியமான தமிழ்நாடு” -உங்களின் உரத்த குரல் பாட்காஸ்ட் போட்டி, மக்கள் குரல்: அடுத்த சுகாதாரத் திட்டம் என்ன? என்பதை எழுதலாம். வண்ணங்களில் விடியல் போஸ்டர் வடிவமைப்பு போட்டி.
படைப்புகளை எப்படி அனுப்பலாம்?
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் படைப்புகளைக் டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். கியூ ஆர் கோடு மற்றும் வாட்ஸ் அப் எண் 9498042408-க்கு ஒரு ‘ஹாய்’ அனுப்பி லிங்கை பெற்று அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
