புதுடில்லி, மே 13 – இந்திய நாடு வளர்ச்சி அடைகிறது. ஆனால், அதற்கு ஏற்றாற் போல் வேலைவாய்ப்பு உருவாக்கப் படவில்லை. சேவைத் துறைகளை விட உற்பத்தி தொழிற்சாலைத் துறைகளில் ஏற்பட்ட தோல்வியே வேலைவாய்ப் பின்மைக்கு முக்கியக் காரணம் என தில்லி பல்கலைக்கழக மாணவர்களு டனான கலந்துரையாடல் நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
டில்லி பல்கலைக்கழத்தில் உள்ள முதுகலை ஆண்கள் விடுதிக்கு கடந்த மே 5- ஆம் தேதி ராகுல் காந்தி திடீரென சென்றார். அங்கிருந்த உணவு விடுதியில் மாணவ, மாணவிகளுடன் உடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு அவர்களு டன் கலந்துரையாடினார்.
இந்த விவகாரம் எதிர்க்கட்சியின ரால் விமர்சிக்கப்பட்டதோடு, ‘அங்கீகா ரமில்லாமல்’ டில்லி பல்கலைக்கழத் திற்குள் ராகுல் காந்தி வருகை தந்த தற்காக விடுதியின் தாளாளர் கே.பி. சிங், தாக்கீது அனுப்பியிருந்தார். இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள தேசி யக் கட்சியின் தலைவரின் இத்தகைய நடத்தை கண்ணியத்திற்கு அப்பாற்பட் டது என அந்த தாக்கீதில் கூறப்பட்டி ருந்தது.
நடந்தது என்ன?
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 11.5.2023 அன்று தனது யூடியூப் தளத்தில் டில்லி பல்கலைக்கழத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில், ‘கேன்டீன் கான்வர்சேஷன்’ எனும் தலைப்பில் காணொலி ஒன்றை பதி வேற்றம் செய்துள்ளார். 8.38 நிமிடங்கள் கொண்ட அந்தக் காணொலியில், ராகுல் காந்தி, டில்லி பல்கலைக்கழக மாணவர்களுடன் உற்சாகமாக அறி முகம் ஆகிக் கொள்கிறார். ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான சலசலப்பு தற்போது எழுந்துள்ளது. இவை இளம் சமுதாயத்தினரை எந்த வகையில் பாதிப்பதாக கருதுகிறீர்கள்! என மாணவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் ராகுல் காந்தி, நாட்டில் ஆண்களை விட பெண்கள் எந்த அளவிற்கு முன் னேறுகிறார்கள், எந்த சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது, எந்த படி நிலையில் நாம் இருக்கிறோம், என்பதை அறிந்து கொள்ளவும், சரியான சமமான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கிதா என்பதை நாட்டிற்கு எடுக்கும் ஒரு எக்ஸ்-ரே போல ஜாதிவாரி கணக் கெடுப்பின் மூலம் அறியலாம் என்று தெரிவித்தார்
மாணவர்கள் சமூகம் சார்ந்த ஈடுபாடுகள் மற்றும் கல்வியில் சமமாக இருக்க வேண்டும் எனக் கூறும் ராகுல் காந்தி, தன்னை நோக்கி வரும் அவ தூறுகளைக் கண்டுகொள்ளாமல் சென்று விடுவேன் என்கிறார். நாம் எடுக்கும் அனைத்துப் பணிகளிலும் நூறு சதவீதம் எடுக்க முயற்சி செய்யா விட்டாலும், 95 சதவீதம் எடுக்க தொடர் முயற்சிகளை எடுக்க வேண் டும். வலிகளை, சவால்களை எதிர் கொள்ளாதவர்கள் வாழ்க்கையை வாழாதவர்கள் என்றார்
நாட்டின் வளர்ச்சிக்கேற்ப வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை
பட்டதாரிகள் போதுமான அள வில் இருந்தும் அதற்கு ஏற்றாற் போல நாட்டில் வேலைவாய்ப்பு இல்லையே என மாணவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், இந்தியா வளர்ச்சி அடைகிறது. ஆனால், அதற்கு ஏற்றாற் போல் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வில்லை. சேவைத் துறைகளை விட உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட தோல்வியே வேலைவாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணம் என்றார்.
‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ எப்படி இருந்தது என மாணவர்கள் ஒரு சேர கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், நடைப்பயணத்தின் போது தினசரி 20 முதல் 25 மாணவி களிடம் பேசுவேன். நீங்கள் என்னஆக விரும்புகிறீர்கள் என கேட்கும் போது பொறியாளர், மருத்துவர், ராணுவ வீரர் என அய்ந்து துறைகளுக்கு உள்பட்டே பதில் கூறுவர். நாட்டில் உள்ள பல் துறை படிப்புகள் குறித்து நம்மை அறிந்து கொள்ள விடாமல் தடுக்கி றார்கள். அதை நம் பெற்றோர்களே செய்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்தையும் ஆராய வேண்டும் என்றார்.
இந்திய ஒற்றுமை நடைப் பயணத் தின் மூலம் தாங்கள் இந்தியாவை இப் போது எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், நாட்டு மக்கள் ஒருவர் இன்னொருவர் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் என்னை வியப்படையச் செய்தது. ஊடகங்களில் காண்பிக்கப்படும் வெறுப்பு, கோபம் மற்றும் ஆணவம் உண்மையல்ல; அது வெறும் மாயை.
மாணவர்கள் அரசியலுக்கு வரு வதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அரசியல் தொடர்பான எந்தக் கேள்வியும் வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
தன்னுடைய பொழுதுபோக்கு தொடர்பான கேள்விக்கு, தற்காப்புக் கலையை கற்று வருவதாகவும், மிகுந்த ஆழமான அரசியல் சிந்தனைவாதியான புத்தர் தன்னுடைய உத்வேகம் என்றார். யோசைனைகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் நல்ல உறவு மாணவர் களுடனான இந்தச் சந்திப்பின் மூலம் கிடைத்துள்ளது என்றார்.