குடியேற்றம் இர.லட்சுமியம்மாள் மற்றும் ந.ரத்தினம் படத் திறப்பு

3 Min Read

குடியேற்றம், நவ. 6- பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் அவர்களின் தாயாரும்,மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந.தேன்மொழி அவர்களின் மாமியாருமான இர.லட்சுமியம்மாள் கடந்த 28.10.2025 அன்று இயற்கை எய்தினார்.

இதையொட்டி அம்மையாரின் படத் திறப்பும், அவரது வாழ்விணை யர் காலஞ்சென்ற ந.இரத்தினம் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் நிகழ்வு முன்னிட்டு இருவரது படத்திறப்பு நிகழ்ச்சி அன்புமொழி குடும்பம் சார்பில் 02-11-2025 அன்று காலை 10.00 மணியளவில்,குடியேற்றம் பெரியார் அரங்கில் வேலூர் மாவட்ட கழகத் தலைவர் வி.இ. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அம்மையாரின் பெயர்த்தி தே.அ. ஓவியா வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலா ளர் நீல. சந்திரகுமார் இருவரது படங்களையும் திறந்து வைத்து ஆற்றிய உரையில், தோழர் அன்பரசன் மற்றும் தேன்மொழி குடும்பத்தினர் லட்சுமி அம்மாள் மற்றும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பெரியவர் இரத்தினம் ஆகியோரது விழி மற்றும் உடலை கொடையாக சிஎம்சி மருத்துவமனைக்கு வழங்கியது பாராட்டுக்குரியது. இந்நிகழ்வு குடியேற்றம் நகரத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.என்று குறிப்பிட்டார்.

வேலூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன் பாபு ஆற்றிய நினை வேந்தல் உரையில், விழிக்கொடை மூலம் எட்டு நபர்களுக்கு கண்பார்வைக் கோளாறுகள் சரி செய்யப்படும். உடற்கொடையால் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்கள் இறந்தவரின் உடலை தங்களது மருத்துவக் கல்விக்கு பயன்படுத்தி கொள்வார்கள். ஆகவே இனிவரும் நாட்களில் மக்கள் விழி மற்றும் உடற்கொடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இறுதியாக கழகச் சொற்பொழி வாளர் காஞ்சி. கதிரவன் ஆற்றிய சிறப்புரையில், தமிழர்களின் பண்பாட்டில் இறந்தவர்களின் உடலை மண்ணில் புதைத்து வருவது தான் வழக்கம், இந்த மண்ணிற்கு அகதிகளாக வந்த பார்ப்பனர் கூட்டம் இறந்தவர்களின் உடலுக்கு அறிவியலுக்கு ஒவ்வாத சடங்கு முறைகளைப் புகுத்தி, உடல்களை எரிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர். இதை நம் தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் ஆசிரியர் ஆகியோர் தொடர்ந்து எதிர்த்து பல்வேறு பரப்புரைகள் செய்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில் இன்று இறந்த அம்மையாரின் விழி மற்றும் உடற்கொடை செய்துள்ளது நம் இயக்க கொள்கைக்கு உகந்தது. இந்நிகழ்வை முன்னுதாரணமாகக் கொண்டு மக்கள் தங்களது குடும்பத்தில் நடைபெறும் திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளில் பார்ப்பனர்களை கொண்டு பிற்போக்குத்தனமான சடங்குகள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலைவர் லோகநாதன், திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர் த.பாரி, வேலூர் மாவட்ட கழக செயலாளர் உ.விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.கலைமணி, சி.லதா, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி,மாவட்ட துணைத் தலைவர் ஆசிரியர் பி.தன்பால்,மாவட்ட அமைப்பாளர் மா.அழகிரிதாசன்,மாவட்ட துணச் செயலாளர் க.பரமசிவம், மாவட்ட கழக துணைத் தலைவர் சிகாமணி, மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் சீனிவாசன், வேலூர் மாவட்டம் மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ.இந்திராகாந்தி, மகளிர் அணி தோழர் ச.ஈஸ்வரி, குடியேற்றம் நகர கழகத் தலைவர் சி.சாந்தகுமார், குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம், மகளிர் அணி தோழர் சுமதி, அணைக்கட்டு ஒன்றிய கழக அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகதோழர்கள் வே.தங்கராஜ், தி.க.சின்னதுரை, பொ.இரவீந்திரன், காட்பாடி கழக தலைவர் பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி மாவட்டச் செயலாளர் யுவன்சங்கர்ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இறுதியாக க.சவு.இந்துஜா நன்றி உரையாற்றினார். தே.அ.புவியரசு,இ.மோகன்ராஜ் மற்றும் அன்புமொழி குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *