சென்னை, நவ.6- தமிழ்நாட்டில் 38 துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அலு வலராக (ஆர்.டி.ஓ) பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆட்சியரின் உதவியாளர்
இதுகுறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை நெடுஞ்சாலை அலுவலக தனித் துணை ஆட்சியர் பூஷ்ணாதேவி, சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலராக (தேர்தல்கள்) மாற்றப்பட்டு உள்ளார். கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ், சென்னைக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மாவட்ட வருவாய் அலுவலராக (திட்டங்கள்) மாற்றப்பட்டு உள்ளார்.
வேலூர் வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனஞ்செயன், சென்னையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் (வினியோகம்-1) சுமதி, சென்னையில் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
தாட்கோ பொது மேலாளர்
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக நிர்வாக அலுவலர் சுகந்தி, சென்னையில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன பொது மேலாளராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் (நிர்வாகம்-1) ரமேஷ், சென்னையில் தாட்கோ நிறுவன பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரிய துணை ஆட்சியர் இளங்கோவன், சென்னையில் வெளிவட்டச்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) மாற்றப்பட்டார்.
கேபிள் டி.வி.
வேலூர் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் ஜெயராமன், திருவள்ளூர் நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) தமிழ்நாடு மாற்றப்பட்டார். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாளர் புனிதா, சென்னையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொது மேலாளராக (இயக்கம்) நியமிக்கப்பட்டார்
துணை முதலமைச்சர் உதவியாளர்
துணை முதலமைச்சரின் முதுநிலை நேர்முக உதவியாளர் மணிராஜ், அவரது சிறப்பு நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் உள்பட 38 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
