சென்னை, நவ. 6- எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணி நடப்ப தால், நான்கு விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள் ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத் தில் மறுசீரமைப்பு பணி, 734.91 கோடி ரூபாயில் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நடக்கிறது. பணிகளுக்கு ஏற்ப, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து, தாம்பரம், கடற்கரை ரயில் நிலை யங்களில் இருந்து இயக்கப் படுகின்றன.
குறிப்பாக, ராமேஸ்வரம் செல்லும் இரண்டு விரைவு ரயில்கள், உழவன், அனந்தபுரி விரைவு ரயில்கள், கடந்த சில மாதங் களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
வரும் 11ஆம் தேதி முதல், மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடையாததால், அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தாம்பரத்தில் இருந்து நீட்டித்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிப்பு
Leave a Comment
