தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வருகையும் சாப்டூர்-சந்தையூர் மலைப்பாதைக்காக கொடுத்த உறுதிமொழியும்

2 Min Read

சாப்டூர், நவ. 6- மதுரை மாவட்டம் ,மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சதுரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் சாப்டூர். சாப்டூர் முதல் சந்தையூர் வரை 8 கி.மீ தூரத்திற்கு ரோடு போட 50 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது.
சந்தையூரிலிருந்து மலைவரையும்,சாப்டூரிலிருந்து மலைவரையும் சாலை போடப்பட்டது.ஆனால் மலைக் கணவாயில் ரோடு இணைக்கப்படாமல் விடப்பட்டது.இரண்டு மைல்தூரம் மட்டும் மலைப் பகுதியில் சாலை போடப்பட்டால் ,பொதுமக்கள் 20 கி.மீ சுற்றி வரும் அவசியம் இருக்காது. உயர்படிப்பிற்கும் ,வியாபாரத்திற்கும் ,பொதுமக்களுக்கும் வசதியாக இருக்கும் இந்த 2 கி.மீ பாதை போடப்படாமல் பல்லாண்டுகளாக தடை நீடிக்கிறது. இந்த 2 கி.மீ. மலைப்பாதை என்பது ரிசர்வ் பாரஸ்ட் என்று ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால் அனுமதி கிடைக்காமல் இருக்கிறது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,தேனி நாடாளுமன்ற தி.மு.க உறுப்பினர் தங்க.தமிழச்செல்வன் சாப்டூர் மலைப்பகுதிக்கே வந்தார். தி.மு.க.வின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். இந்தப் பகுதியில் வாழும் ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்களின் கோரிக்கை இது என்று சாப்டூர் வடக்குப் பகுதி தி.மு.க. கிளைச்செயலாளர் வா.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரை பொன்னாடை அணிவித்து, புத்தகம் கொடுத்து வரவேற்ற பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு, திருச்சி பெரியார் உலகத்திற்கு ஒரு மாதம் ஊதியத்தை அளித்த தங்களுக்கு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சார்பாக ந்ன்றி என்று தெரிவித்தார். மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம், தான் பள்ளியில் படிக்கும் காலத்தில்,1975இல் இந்தப் பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.இந்தப் பக்கமும் ,அந்தப்பக்கமும் சாலை போட்டு இணைப்பு கொடுக்காமலேயே போய்க்கொண்டிருக்கிறது. சாம்பல் நிற அணில் பாதுகாப்பு என்று சொல்கிறார்கள்.
தார் சாலைக்குப் பதிலாக சிமெண்ட் சாலை போடலாம். அல்லது கல் சாலை போடலாம். ஒன்றிய அரசின் வனத்துறையும் தமிழ நாடு வனத்துறையும் இதற்கு அனுமதி கொடுக்கவேண்டும்.தாங்கள் அமைச்சர்களிடம் பேசி இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித்தரவேண்டும் என்று வா.நேரு தெரிவித்தார்.
பின்னர் அனைவரிடமும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், அதிகாரிகளிடம் அந்த இட்த்திலேயே கலந்து ஆலோசித்து, பதிவுகளை கணினியில் ஏற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார். எந்த இடத்தில் சாலை வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்களோ அந்த மலைப்பகுதிக்கே நடந்து வந்து மக்களிடம் கேட்டு, பிரச்சினையைப் புரிந்து கொண்டு,செய்து தருகிறேன் என்று மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்து நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் விடைபெற்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *