அகர்தலா, மே 13 – திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் சாலையில், ஓர் இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அந்தப் பெண் சிலரால் கூட்டு பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளா னது தெரியவந்தது.
கல்லூரி மாணவியான அவர், இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். வழி யில் ஏற்கெனவே அறிமுக மான கவுதம் ஷர்மா என்பவர், அவரை காரில் ஏறிக்கொள்ளச் சொல்லி உள்ளார். தெரிந்தவர் என்பதால் மாணவி காரில் ஏறி பயணித்துள்ளார். காரில் கவு தம் ஷர்மாவின் நண்பர்கள் 2 பேரும் இருந்துள்ளனர்.
இரவு தனிமையை பயன் படுத்திக் கொண்ட கவுதம் ஷர்மா, மற்றும் நண்பர்கள், அவரிடம் அத்துமீறி நடந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு. பின்னர் அவரை அமடாலி பைபாஸ் சாலையில் தள்ளி விட்டுவிட்டு சென்று விட்ட னர். மாணவி மயங்கிய நிலையில் கிடந்தபோது, அவ ரது பெற்றோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மாணவி யின் தாய் அளித்த புகாரின் பேரில் கவுதம் ஷர்மா கைது செய்யப்பட்டார்.