மணமகனை குதிரையை விட்டு கீழே இறக்கி சரமாரி தாக்கு-25 பேர் மீது வழக்குப்பதிவு!!
ஆக்ரா, மே 13 – பா.ஜ.க. ஆளும் உத் தரப்பிரதேசத்தில் குதிரையில் ஏறி ஊர்வலமாக சென்ற ஒடுக் கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மணமகனை குதிரையை விட்டு கீழே இறக்கி உயர்ஜாதி ஆணவத் துடன் அடித்து துன்புறுத்தியுள் ளனர்.
இதுகுறித்து 25 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. வடமாநிலங்களில் ஜாதி வன்முறைதொடர்ந்து அரங் கேறி வருகிறது.
இந்த நிலையில் ஒடுக்கப் பட்ட சமுதாயத்தை சேர்ந்த மணமகனை உயர் ஜாதியினர் ஜாதி ஆணவத்துடன் தாக்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சோஹல்லா ஜாதவ் பஸ்தி பகுதியில் வசிக் கும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்புக்காக மாப்பிள்ளை தனது வீட்டிலி ருந்து திருமணம் நடக்கும் இடத் துக்கு செல்ல அவர்களது உற வினர்கள் அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றை ஏற்பாடு செய்து, மணமகனை அதில் ஏற்றியுள் ளனர். அவரும் மகிழ்ச்சியுடன் குதிரையில் பவனி வந்துள்ளார். அப்போது வழியில், உயர் ஜாதி பிரிவைச் சேர்ந்த ஒரு கும்பல், மணமகனிடம், Ôநீ எப்படி குதி ரையில் வரலாம்?Õ என்று கேட் டுத் தகராறு செய்து, குதிரையில் இருந்து இறக்கி விட்டு அவமா னப்படுத்தி, தடி மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு அவரையும் மற்றவர்களையும் தாக்கி, “தாழ்த் தப்பட்ட சமூக மாப்பிள்ளைகள் திருமணத்திற்கு எப்படி குதி ரையில் செல்லலாம். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என்று பேசியதால் மணமகன் மற்றும் அவரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதை தட்டி கேட்டவர்களை அடித்து விரட் டினர், மேலும் தாழ்த்தப்பட்ட சமூக பெண்களையும் மானபங் கம் செய்து, திருமண மண்டபத் தின் மின் சாரத்தையும் துண்டித் தனர். இது தொடர்பாக காவல் துறையினர் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.