பொதுத் தேர்வுக்காக
2-5 நாள்கள் வரை விடுமுறை
2-5 நாள்கள் வரை விடுமுறை
2025-2026 கல்வி ஆண்டிற்கான 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நேற்று (5.11.2025) வெளியானது. அதில், ஒவ்வொரு தேர்வுக்கும் 2-5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான இந்த இடைவெளி என்பது மாணவர்கள் சிரமமின்றி படிக்கவும், மன அழுத்தமின்றி தேர்வு எழுதவும் உதவும் என உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அனில் அம்பானி மீது பிடி இறுகுகிறது
« அனில் அம்பானியின் நிதி மோசடி வழக்கை கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் கையில் எடுத்துள்ளது.
«போர்ட்டர் நிறுவனம் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
«2026 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் பேடிஎம் ரூ.211 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
« மகளிர் உதவி தொகையால் பல மாநிலங்கள் கடும் நிதி அழுத்தத்தை சந்திப்பதாக பிஆர்எஸ் அறிக்கையில் தகவல்.
அரிசி உணவை அறவே புறக்கணித்தால்…
உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரிசியை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், அப்படி செய்வது உடலுக்கு தீங்கானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எலும்பு, தசை, மூட்டுகள் சரியாக வேலை செய்ய, உடலுக்கு Glycogen . Glycogen, கார்போஹைட்ரேட்டில் இருந்து தான் கிடைக்கிறது. எளிதில் செரிமானமாகும், கார்போஹைட்ரேட்டை கொடுக்கும் அரிசியை ஒதுக்குவதால், பல பிரச்சினைகள் வரலாம். எனவே, கொஞ்சம் சோற்றையும் சாப்பிட வேண்டும்.
நாள் முழுக்க கணினி,
கைப்பேசி பார்க்கிறீங்களா?
கைப்பேசி பார்க்கிறீங்களா?
உங்கள் கண்கள் பாதிக்கப்படலாம் என தெரிந்தும் வேலைக்கு போனால் கணினி, வீட்டுக்கு வந்தால் ரீல்ஸ் என நாள்தோறும் அந்த திரைகளைப் பார்த்துட்டே இருக்கீங்களா?
கண்களுக்கு பாதிப்பு வராமல் காக்க சில டிப்ஸ் இருக்கு. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்காவது பார்க்க வேண்டும். கண்களை அடிக்கடி சிமிட்டுங்க. திரையை பார்க்கும் நேரத்தையும் குறைத்துகொள்வது நல்லது.
10-ஆவது படித்திருந்தாலே போதும்,
405 பணியிடங்கள்
405 பணியிடங்கள்
அணுசக்தித் துறையில் 405 பணி பயில்பவர் (Apprentice) பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, 10,560 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th & அய்.டி.அய். தேறி இருக்க வேண்டும். 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேவை இருப்பவர்கள் www.apprenticeshipindia.gov.in -15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மனிதர்கள் வாழ்ந்த தடயமே இல்லாமல் போவார்கள்: நாசா எச்சரிக்கை!
பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதால், மனிதர்களே வாழ முடியாத நிலை உருவாகலாம் என நாசா எச்சரித்துள்ளது. நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் கடல்களில் உள்ள நுண்ணுயிர்கள் வெப்பமயமாதல் & அமிலமயமாக்கல் காரணமாக குறைந்து வருகின்றனராம். மேலும், காடுகளை அழிப்பது, மாசு அதிகரிப்பு, கார்பன் டைஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றால் பூமியில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருகிறதாம்.
