சென்னை, நவ. 6 கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி நகர், வள்ளுவர் தெருவில் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள கருவறையில் இருந்த பொருள்கள் கடந்த 3 ஆம் தேதி சிதறிக் கிடந்தன.
அம்மன் சிலை கையிலிருந்த பித்தளை திரிசூலம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகிகள் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத் தில் புகார் தெரிவித்தனர். அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோயிலில் திருட்டில் ஈடுபட்டது வியாசர்பாடி, முல்லை நகரைச்சேர்ந்த பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் பாலாஜி வியாசர்பாடி பகுதியில் 2 இருசக்கர வாகனங்களைத் திருடியதும். அதில் ஒரு வாகனத்தில் சென்று. கோயிலில் புகுந்து திரிசூலத்தைத் திருடியதும் தெரியவந்தது. மேலும் தங்கம் என நினைத்து அதைத் திருடிய தாக பாலாஜி கூறியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாமி கும்பிட பருவத மலையில் ஏறிய பக்தர் சாவு
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஆனந்தம்பாளையம் கிரா மத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 44), எலக்ட்ரீசியன் தனசேகர் நேற்று (5.11.2025) பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலையில் வழிபாடு செய்வதற்காகச் சென்றார்.
தனசேகர், மலையில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தனசேகரை மீட்டு மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தபோது, ஏற்கெனவே தனசேகர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
