சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் மக்கள் சேவைக்கான ‘கியூ ஆர்’ குறியீடு செயலி

3 Min Read

முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

அரசியல்

சென்னை, மே 13  சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ்மக்களுக்கு வழங் கப்படும் சேவைக்காக ‘க்யூஆர்’ குறியீடு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான ‘விரைவு துலங்கல் (க்யூஆர்) குறியீடு’ மென்பொருள் செயலியை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.5.2023) தொடங்கி வைத் தார். தொடர்ந்து ஈரக் கழிவுகளி லிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்துக்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு அதன் விற்பனையை அறிமுகப் படுத்தினார். இந்நிகழ்ச்சியில், நக ராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநக ராட்சி மேயர்ஆர்.பிரியா, தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். 

தமிழ்நாடு அரசு நிர்வாக செயல் பாடுகளில் டிஜிட்டல் மயமாக்குதல் என்பது வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படை யில் துறைதோறும் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ‘க்யூஆர்’ குறியீடு மென்பொருள் செயலி தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இந்த ‘க்யூஆர்’ குறியீடு ஒவ்வொரு கட்டமைப்புகளின் முகப்புகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ளாட்சி ஊழியர்களால் ஒட்டப்படும். இதன்மூலம் பொதுமக்கள் உள் ளாட்சி சேவைகளின் மீதான நிறை குறைகளை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி ஊழியர்கள் தங்களது பணியை மேம்படுத்தி மக்களுக்கு திருப்தி கரமான சேவைகளை செய்திட வழிவகுக்கும். சொத்து வரி உள் ளிட்ட அனைத்து வரி நிலுவை களைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலிமூலமே தொகையை செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டிலிருந்தவாறே ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன்செய்து பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகார் / கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள், அவற்றின் நிலை பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

அத்துடன், உள்ளாட்சி கட்டமைப்புகளான, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், எரியூட்டு மயானம், சந்தைகள், விளையாட்டு மைதானம், நகர்நல மய்யம், கழிப்பறைகள் உள்ளிட்ட பொது மக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட் டுள்ள ‘க்யூஆர்’ குறியீடு மூலம் பொதுமக்கள் தங்களது கருத்து களை பதிவு செய்தால் உள்ளாட்சி களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அக்கட்டமைப்புகளை மேலும் நல்ல முறையில் மக்கள் எதிர் பார்ப்புக்கு ஏற்ப மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ‘க்யூஆர்’ குறியீடு மூலம் தெரிவிக்கும் கோரிக்கைகள் / புகார்கள் அனைத்தும் உள் ளாட்சிஅலுவலகத்தில் உள்ள கட் டுப்பாட்டு அறையில் ஒருங்கி ணைந்த முறையில் பெறப்படும். பின்புஅவை தொடர்புடைய அலு வலர்கள் மூலம் தீர்வு காணப்படு வதால் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் இந்த சீர்மிகு ஆளுமை திட்டத்தின் மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும். 

‘செழிப்பு’ இயற்கை உரம்: 

ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக் கப்படும் இயற்கை உரத்துக்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு விற் பனைக்காக அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளி லும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் டன்குப்பை சேகரம் ஆகிறது. மாநகராட்சிகளில் 629 இடங்களில், நகராட்சிகளில் 334 இடங்களில் மற்றும் பேரூராட்சிகளில் 489 இடங்களிலும் உள்ள நுண் உர மய்யங்கள் மற்றும் காற்றாடல் மய்யங்களில் மட்கும் குப்பை அறிவியல் முறையில் செயலாக்கம் செய்யப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப் படவுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *