மதுரை, நவ.5 உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தன்னை தாக்கிய வழக்கில் கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து இந்திரா என்ற பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் “இந்திராவின் கணவன் தனசீலனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத்தண்டனையை குறைக்கத் தேவையில்லை.
குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தது.
மேலும், “திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது. திருமண உறவு என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை.
துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம். வீட்டிற்குள் நடக்கும் துன்புறுத்தல் பல நேரங்களில் நான்கு சுவருக்குள் மட்டுமே நிகழ்பவையாக இருக்கும். ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் எனக் கூறுவது அந்த சட்டப்பிரிவின் நோக்கத்தையே சிதைக்கும்” எனக் கருத்து தெரிவித்தது.
