பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி மின்வாரிய அதிகாரிகள் தகவல்

2 Min Read

மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை, நவ.5 தனியார் நிறுவனங்கள் வாயிலாக பசுமை மின் உற்பத்தி திட் டங்களை செயல்படுத்த மின் வாரியத்துக்கு, மின்சார ஒழுங் குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

பசுமை மின் உற்பத்தித் திட்டம்

தமிழ்நாட்டில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க சாதகமான காலநிலை உள்ளது. தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் நிலையில், மின்வாரியம் அந்த பணியில் மெத்தனம் காட்டி வந்தது. கடந்த ஆண்டில், மின்வாரியத்தில் இருந்து பசுமை எரிசக்தி கழகம் என்ற தனி நிறுவனம் துவக்கப்பட்டது.

இந்நிறுவனம், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, பசுமை மின்திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தற்போது, மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திருவாரூர். கரூரில் தலா, 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள், தூத்துக்குடி, மதுரை. கன்னியாகுமரியில், 16 மெகாவாட் திறனில் சூரியசக்தி மற் றும் 19 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களும், கோவை உள்ளிட்ட ஏழு இடங்களில், 375 மெகாவாட் திறனில், மின்கல ஆற்றல் சேமிப்பு (பேட் டரி ஸ்டோரேஜ்) போன்ற திட்டங்களை செயல்படுத்த, மின் வாரியத்திற்கு. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி மற்றும் கரூர் மாவட்டம், வெள்ளியணையில் தலா, 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் மற்றும் அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மூன்று மணி நேரத்துக்கு சேமித்து வைத்து, மீண்டும் பயன்படுத் தும் வகையில், மின்கல ஆற் றல் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கயத்தாறு, மதுரை புளியங்குளம், கன்னியாகுமரி முப்பந்தலில், 16 மெகாவாட் திறனில் சூரியசக்தி. 18.75 மெகாவாட் திறனில் காற் றாலை மின்நிலையங்களை, தனியார் நிறுவனம் வாயிலாக அமைக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை மின்நிலையத்தில், 25 மெகாவாட், புதுக்கோட்டை யில் 25, புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் 50, திருவாரூரில் 50, கோவை காரமடையில் 75, தேனி தப்பகுண்டில் 50, திருப்பூர் ஆணைகடவில் 100 மெகா வாட் என. 375 மெகாவாட் பசுமை மின்சாரத்தை, நான்கு மணி நேரத்துக்கு சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, பசுமை எரிசக்தி கழகம், ஒப்பந்தம் கோரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து. தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்ய, விரைவில் ஒப்பந்தம் கோரப்படவுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *