உண்மையைக் கக்கி விட்டார் தமிழிசை சவுந்தரராசன்!

2 Min Read

‘‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) ஓர் இடம் கூட கிடைக்காததற்கு, இங்கு தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதே காரணம்” என்று தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர் தமிழிசை சவுந்தரராசன் கூறியதாகச் சொல்லப்படும் கருத்து, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கூற்று, பா.ஜ.க.வின் தொடர்ச்சியான வெற்றிகள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பல விமர்சனங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழிசை சவுந்தரராசனின் கூற்றுப்படி தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதால்தான் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை என்றால், அதன் தொடர்ச்சியாக பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகவும், மத்தியப் பிரதேசத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகவும் பாஜக ஆட்சியில் இருப்பதற்கும், 2018 ஆம் ஆண்டு திரிபுராவில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்த நிலையில், திடீரென முழுப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்கும், மேலும் 2014, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றிபெற்றதற்கும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து வேறுவிதமான ஒரு சித்திரத்தை அவர் முன்வைக்கிறாரா?

வட மாநிலங்களில் பாஜக தொடர்ந்து வெற்றிபெறும் பகுதிகளில், தமிழ்நாட்டில் செயல்படுவது போல் தேர்தல் ஆணையம் சரியாக நேர்மையாக செயல்படாமல் மோசடிகளுக்குத் துணைபோனதால்தான் பாஜக இந்த வெற்றிகளைப் பெற்றது என்று அவர் சொல்ல வருகிறாரா?

ஒரு மாநிலத்தில் பாஜக தோல்வியைத் தழுவுவதற்குக் காரணம், தேர்தல் ஆணையத்தின் நேர்மை என்று ஒரு மூத்த பா.ஜ.க. தலைவர் வெளிப்படையாகக் கூறியிருப்பது – நாடு முழுவதும் உள்ள தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மறைமுகமாக ஒரு தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது என்றும், இது பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றி களின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்க வழி வகுப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் நேர்மை குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்டுள்ள இந்தச் சூழலில், இதுபற்றி பாஜகவின் தேசியத் தலைமை அல்லது தேர்தல் ஆணையம் ஏதேனும் விளக்கம் அளிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த அறிக்கை, வடமாநிலங்களில் பாஜகவின் தேர்தல் வெற்றிகள் குறித்து பரவலாக நிலவும் விமர்சனங்களை மேலும் வலுப்படுத்தும் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

எவ்வளவுதான் உண்மைகளை மூடி மறைத் தாலும், சில நேரங்களில், அந்த உண்மை தம்மை அறியாமலேயே சம்பந்தப்பட்டவர்களாலேயே வெளிவந்தே தீரும் என்ற உளவியலுக்கு, இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

உண்மையைக் கட்டிப் காப்பதற்குச் சாமர்த்தியம் தேவை இல்லை; துணிவும், நேர்மையும் மட்டும்தான் தேவை! ஆனால் பொய்யை நிரந்தரமாகக் காப்பாற்றுவது கடினமே!

‘கெட்டிக்காரன் புளுகு’ ஒரு நாள் வெளிப்பட்டே தீரும் என்பதற்கு பிஜேபி பிரமுகர் தமிழிசை சவுந்தர ராசன் நம் கண்முன் காணும் ஓர் எடுத்துக்காட்டே!

அதுவும் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி வகையறாக் களுக்குப் ெபாய் சர்க்கரைப் பொங்கலாயிற்றே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *