சென்னை, நவ.5- பணியின்போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையிலான பணிக்கு ‘இணைய தளம்’ மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு குடிமைப் பணிகள் (கருணை அடிப்படையிலான பணி நியமனம்) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி,பணியின்போது உயிரிழந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை பணி கோரி விண்ணப்பிக்க www. tncgpa.tn.gov.in என்ற புதிய வலைதளத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த வலைதளம் கடந்த 31ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், இனிமேல் கருணை அடிப்படையிலான பணி கோருபவர்கள் இந்த வலைதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் இருந்து கைப்பேசி கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
முக்கிய தகவல்கள்!
ஓடும் ரயிலில் இருந்து கைப்பேசி கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தெரிந்து கொள்வது ரயில் பயணங்களின் போது உபயோகமாக இருக்கும்.
இதுகுறித்து தமிழ்நாடு ‘ரயில் தகவல்’ எனும் கைப்பேசி எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஓடும் ரயிலில் பயணிக்கும் போது உங்கள் கைப்பேசி, பர்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருள் கீழே விழுந்தால், பதட்டப்படாமல், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை ரயில்வே அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.
நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்
உடனடியாக கம்ப (‘பில்லர்’) எண்ணைக் குறித்துக் கொள்ளவும்.
உங்கள் பொருள் எந்த இடத்தில் கீழே விழுந்ததோ, அந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுவப்பட்டிருக்கும் கம்பத்தில் (Electrical Pole / Kilometer Stone) மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் எண் மற்றும் குறியீட்டை (உதாரணமாக: 47/12) உடனடியாக குறித்துக் கொள்ளுங்கள்.
இந்த எண், உங்கள் பொருள் விழுந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டறிய அதிகாரிகளுக்கு உதவும் மிக முக்கிய ஆதாரம்.
ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளியுங்கள்.
நீங்கள் குறித்து வைத்த கம்ப எண்ணை உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும்.
TTE (பயணச் சீட்டு பரிசோதகர்) அல்லது ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரியை அணுகி, விழுந்த பொருளின் விவரம் (மாடல், நிறம்) மற்றும் நீங்கள் குறித்துக் கொண்ட கம்ப எண்ணை ஒப்படைக்கவும்.
உதவி எண்களுக்கு அழைக்கவும்: ரயில்வே உதவி எண் 139 அல்லது ஆர்பிஎப் உதவி எண் 182 ஆகியவற்றுக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்கலாம்.
