சென்னை, நவ.5- தமிழ்நாடு அரசின் இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நெல் கொள்முதல் விகிதம் உயர்ந்துள்ளதாக ‘தி இந்து’ நாளேடு பாராட்டியுள்ளது.
நெல் கொள்முதல்
நெல் கொள்முதல் தொடர்பாக ‘திஇந்து’ ஆங்கில நாளேடு வெளி யிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில், தமிழ்நாட்டில் குறை வான அறுவடை நடைபெறும் பருவமான, ஏப்ரல் முதல்ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில், நெல் கொள்முதல் விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாட்டில் நடைபெறும் ஒட்டு மொத்த நெல் கொள்முதலில், குறைவான அறுவடை நடைபெறும் பருவங்களில், அதிக அளவில் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ‘தி இந்து’ நாளேடு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் நெல் கொள் முதல் விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது என்று, ஒன்றிய உணவு தானி யங்கள் கொள்முதல் இணையதளத்தில் குறிப் பிடப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ சுட்டிக் காட்டியுள்ளது.
ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ள தரவுகளின் படி, 2021-20–22ஆம் ஆண்டில், குறைவான நெல் அறுவடைப் பருவத்தில், 15.94 சதவீதமாக இருந்த நெல் கொள்முதல், 2022-20–23ஆம் ஆண்டில் 43.67 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023–-2024ஆம் ஆண்டின் குறைவான நெல் அறுவடைப் பருவத்தில் 36.77 சதவீதமாக இருந்தநெல் கொள்முதல், 2024-20–25ஆம் ஆண்டில் 41.02 சதவீதமாக உயர்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 16 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நெல் கொள்முதல், 2025ஆம் ஆண்டில் 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக ‘தி இந்து’ நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது.
நெல் கொள்முதலில் டெல்டா மாவட்டங்கள் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்கள் 24 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ள தாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், தமிழ் நாடு முழுவதும் திறக்கப் பட்டுள்ள நெல் கொள் முதல் நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கை களால் குறுவை மற்றும் சம்பா பருவங்களில் நெல் கொள்முதலின் அளவு அதிகரித்துள்ளது என்று ‘தி இந்து’ நாளேடு பாராட்டியுள்ளது.
