
கபிஸ்தலம், நவ. 4- தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் மாவட்ட அள விலான பேச்சுப்போட்டி கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் 26.10.2025 ஞாயிறு பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வுக்கு கும்பகோணம் கழக மாவட்டக் காப்பாளர் வை. இளங் கோவன் தலைமை ஏற்றார்.
பாபநாசம் ஒன்றிய கழகத் தலைவர் தங்க. பூவானந்தம், பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.சேகர் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் முருகானந்தம், பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் தீபக், கழக பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ் மணி ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினார்கள்.
அனைவரையும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பேரா. ம. சேதுராமன் வரவேற்று பேசினார். போட்டியில் பங்கு பெறும் மாணவர்களை வாழ்த்தி ஊடகவியலாளர் ம.அண்ணாதுரை, மேனாள் மாவட்ட இந்திய பொதுவுடைமை இயக்க துணைச் செயலாளர் பரமசிவம், மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி. மோகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிகழ்வினை பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் க.திருஞான சம்பந்தம் ஒருங்கிணைத்தார்.
தொடர்ந்து போட்டியின் விதிமுறை களை முதல்வர் முருகானந்தமும், முதல்வர் தீபக்கும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி நடுவர் ஆ. தமிழ்மணி எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பேச்சுப் போட்டி தொடங்கியது. பல்வேறு கல்லூரியில் இருந்து 16 மாணவர்கள் பங்கு பெற்றார் கள். அவர்களில் மூவரை நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆனால் மற்ற போட்டியாளர்களையும் அவர்களால் ஒதுக்கிட முடியாத அளவுக்கு அவர்களுடைய பேச்சுமற்றும் கருத்துத் திறன் வெளிப்பட்டதால் பார்வையாளர்களாக வந்திருந்தவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளை வழங்கிட அமைப்பாளர்கள் முடிவு செய்தார்கள்.
கும்பகோணம் அன்னை கல்வியியல் கல்லூரி மாணவர் வெ..பூர்ணிமா முதலிடமும், ஜி. பிரைசிங் ஜோஸ்வா இரண்டாமிடமும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர் பா.ச. வைசாலி மூன்றாம் இடமும் தேர்வு பெற்றார்கள்.
தொடர்ந்து ஆறுதல் பரிசாக கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி சு.ரோஷினி, திருவிடைமருதூர் அரசு கலை அறிவியல் கல்லூரி சி கண்ணம்மாள், நா. ஆகாஷ், குடந்தை இதயா மகளிர் கல்லூரியில் ஜா. சத்தியா, அரசு கலைக் கல்லூரி,கும்பகோணம் ம. காவியா, வசந்தகுமார், அரசினர் கலைக் கல்லூரி கும்பகோணம் ஆ. அபிஷேக் அருள் டேனியல், கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரி சு.முத்துமீனா ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றார்கள்.
முதல் பரிசாக ரூபாய் 5000 மற்றும் சான்றிதழ், புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
இரண்டாம் பரிசாக ரூபாய் 3000 சான்றிதழ்,புத்தகங்கள் வழங்கப்பட்டன.. மூன்றாம் பரிசாக ரூபாய் 2000 சான்றிதழ், புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், புத்தகங்களும் ஆறுதல் பரிசாக ரூபாய் 500 வழங்கப்பட்டது.
முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகள் குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தணிக்கையாளர் சு. சண்முகம் சார்பாக வழங்கப்பட்டது.
ஆறுதல் பரிசுகளை மாவட்ட காப்பாளர் வை. இளங்கோவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பேரா.ம.சேதுராமன், பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க. பூவானந்தம், திராவிடர் சமுதாய நல, கல்வி அறக்கட்டளை ம. அண்ணாதுரை, மாநில பொதுச்செயலாளர் வி.மோகன் ஆகியோர் வழங்கினார்கள்.
அனைவருக்குமான புத்தகங்களை மாவட்ட அமைப்பாளர் க.திருஞான சம்பந்தம் வழங்கினார்.
மாணவர்கள் அனைவருக்கும் கூடுதலாக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கு.ப.செயராமன், தான் எழுதிய பட்டுக்கோட்டை அழகிரி வாழ்க்கை வரலாறு நூலினை வழங்கினார்.
ஏற்கனவே குடந்தையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் 200 நூல்களை ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மூலம் வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒலி,ஒளி அமைப்பை பெரியார் கல்வி,சமூகப்ப்பனி அறக்கட்டளை ஏற்பாடு செய்து வழங்கியது.
நிகழ்வில் பள்ளி நிருவாகி நா.குண சேகரன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் பெரியார் கண்ணன்,மதிவாணன், நெப்போலியன், நாகராஜ், கு.இளவரசன், நாச்சியார் கோவில் வெங்கடேசன், மணியன், மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் ஏகாந்த லெனின், தஞ்சாவூர் தமிழாசிரியர் ப.திருநாவுக்கரசு, எழுத்தாளர் கரந்தை ஜெயக்குமார். ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
இறுதியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பேரா. ம.சேதுராமன் நன்றி கூறிட நிகழ்வு இனிதே முடிவுற்றது.
தொடர்ந்து அடுத்த நிகழ்வாக சிந்தனைக்களம் – – 9 தொடங்கியது. சரியாக 06.30 மணிக்கு பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் மு.சேகர் தலைமையிலும், ஒன்றிய திராவிடர் கழகத் தலைவ்ர் தங்க.பூவானந்தம் முன்னிலையிலும், தொடங்கியது.
பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் சா.வரதராசன் அனைவரையும் வரவேற்றார்.
தலைமை உரையை மு.சேகரும், முன்னிலையாளர் உரையை தங்க.பூவானந்தமும் வழங்கினார்கள்.
பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் இன்றைய சிறப்பு உரையாளர் சிங்கப்பூர் மேனாள் விரிவுரையாளர் ப.திருநவுக்கரசை மரபு கருதி அறிமுகப்படுத்தினார்.
அவரது அத்தான் என்று சிறப்பாக அழைக்கப்படும் எழுத்தாளர் கரந்தை ஜெயக்குமாரையும் இணைத்து அறிமுகம் செய்து அடுத்த கூட்டத்திற்கான உரையாளராக அவரை அவரது ஒப்புதலோடு அறிவித்து அவர் திறனாய்வு செய்ய வேண்டிய நூலாக ஆசிரியரின் ‘வாழ்வியல் சிந்தனை’ நூலினையும் வழங்கிட வேண்டினார்.
அவருக்கு ஒன்றியத் தலைவர் தங்க்.பூவானந்தம் பயனாடையும், ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி வாழ்வியல் சிந்தனை நூலினையும் வழங்கி சிறப்பித்தார்கள்.
சிறப்புரையாற்றும் ப.திருநாவுக்கரசு அவர்களுக்கு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கு.ப.செய ராமன் பயனாடை அணிவித்தார். மாவட்ட ஓய்வூதிய சங்கத்தலைவர் துரை சாமி வாழ்வியல் சிந்தனைகள் நூலினை வழங்கி சிறப்பித்தார்கள்.
நிகழ்வை குயில்.பெரியார்கண்ணன் அவர்களும், உ.நாகராஜ் அவர்களும் நேரலை செய்தார்கள். பெரியாரும் வள்ளலாரும் என்னும் தலைப்பில் கருத்து மழையை சுவையாகவும், கவனமாகவும், கூர்ந்து கவனிக்கும்படியும் நிறைய புதிய புதிய தகவல்களையும் வழங்கினார்கள். எல்லோரும் அறிந்திடாத ஆனால் அறிய வேண்டிய செய்திகளைம், தந்தைபெரியார்- வள்ளலார் இருவரையும் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டும், தற்கால, கடந்த கால வரலாறுகளை எளிய முறையில் அனைவரும் அறிந்து கொள்ளும்படி 01மணி நேரம் 15 நிமிடங் கள் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து அவரது உரைக்கு பின் னூட்டங்களை வள்ளலார் தொண்டர் கொட்டையூர் தயாநிதி, கபிஸ்தலம் செவ்வேல் சாமிநாதன், ஆசிரியர் தி.ம.நா.அசோக் ஆகியோர் வழங்கினார்கள்.
நமது குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டிட வேண்டும் என்பதை சிறப்பு ரையாளர் தன் பேசினூடே வலியுறுத்தி பேசியதை சுட்டிக்காட்டி நடைமுறையில் உள்ள சில பெயர்களுக்கான தமிழ்ப் பொருளை பார்வையாளர்கள் கவனத்துக்கு பொதுச்செயலாளர் மோகன் கொண்டுவந்தார்.
தொடர் வருகை புரியும் பார்வையா ளர்கள் ஆசிரியை பாரதி, ஆசிரியை சண்முகப்பிரியா, கபிஸ்தலம் லயன் இளையசேகர், நாச்சியார்கோவில் வெங்கடேசன், சுவாமிமலை ஞானம், ஆகிய அய்ந்துபேருக்கும் திருவாளர்கள் சருக்கை விஏ.ஓ ராமலிங்கம், உம்பளாப்பாடி கிருபாகரன், சருக்கை சசி கலியமூர்த்தி, லயன் எஸ்பிஅய்.ஆறுமுகம், பாபநாசம் முனைவர். சு.பாலகிருட்டிணன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தார்கள்.
இறுதியில் மாவட்ட கழக இளைஞரணி பொறுப்பாளர் ஏகாந்த.லெனின் அவர்கள் நன்றி கூறி நிறைவு செய்தார்கள்.
