சென்னை, நவ. 4- வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் புளியந்தோப்பில் 2.11.2025 அன்று நடை பெற்றது.
வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டு, திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள பெரியார் உலகம் பணிகள் குறித்தும்,
வட சென்னை மாவட்ட கழகம் சார்பில் நிதி வழங்குவது தொடர்பாகவும், அந்த நிதியை எவ்வாறு எல்லாம் வசூல் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
தந்தை பெரியாரின் தத்துவத்தை, ஆசிரியர் கி.வீரமணி தினந்தோறும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் தொண்டினை குறித்து எடுத்துரைத்தார்.
கூட்டத்திற்கு முன்ன தாக பெரியார் பிஞ்சு யாழ் தமிழ் கடவுள் மறுப்பு கூறினார்.
வட சென்னை மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் த.பரிதின் வரவேற்று உரையாற்றினார். கழக மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புசெல்வன் ஒருங்கிணைப்பில் நடந்த கூட்டத்தில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்ட அமைப்பாளர் ஓட்டேரி பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி மாநில அமைப்பாளர் பூவரசன், அயன்புரம் துரைராஜ், க.துரை, சோ.பாலு, க.செல்லப்பன், த.மரகதமணி, இளவரசி, புரசை.பாலமுருகன், திராவிடல் எழில், கவின் கிஷோர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் உலகத்திற்கு வசூல் குழு அமைப்பு
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புசெல்வன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன், கொடுங்கையூர் தங்கமணி – தனலட்சுமி, மாவட்ட அமைப்பாளர் ஓடேரி பாஸ்கர், மாவட்ட துணைத்தலைவர் நா.பார்த்திபன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஓட்டேரி ந.கார்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் த.பரிதின் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
தீர்மானங்கள்
தமிழர் தலைவரின் இலட்சியத் திட்டமான பெரியார் உலகத்திற்கு வட சென்னை மாவட்ட கழகம் சார்பில் ரூ.30 லட்சம் நிதி திரட்டித் தருவதென தீர்மானிக்கபடுகிறது.
டிசம்பர் 24ஆம் தேதி வடசென்னையில் நடக்கும் தமிழர் தலை வரின் பரப்புரைக் கூட் டத்தை எழுச்சியோடு நடத்துவது என்றும் அன்றைய தினமே பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
கழக ஏடான விடு தலைக்கு சந்தா சேர்த்தல் உள்ளிட்ட கழகப் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
