அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்த ஜோதி இணையரது பேத்தியும், பா.சுந்தரகண்ணன் – பொன்மணி இணையரது மகளுமான சு.சாசினி பிறந்த நாள் (04.11.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர்.
– – – – –
பட்டுக்கோட்டை கழக மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், அத்திவெட்டி மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் வை.ஆடலரசு (எ) இராமமூர்த்தியின் துணைவியார் சுயமரியாதைச் சுடரொளி இரா.இரத்தினவள்ளியின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை (7.11.2025) முன்னிட்டு இணையர் வை.ஆடலரசு (எ) இராமமூர்த்தி, மகன்: இரா.இராஜசேகரன், மகள்: இரா.வாலண்டினா, மருமகன்: வீ.செல்வகுமார், பேத்தி: ஆனந்த மகிழினி ஆகியோர் அம்மையாரை நினைவு கூர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!
