“இந்திய சமூக அமைப்பே தலித் விரோத சமூக அமைப்புதான்”

2 Min Read

இந்திய சமூக அமைப்பே தலித் விரோத சமூக அமைப்புதான் “இந்திய சமூக அமைப்பே தலித் விரோத சமூக அமைப்புதான்” என்ற பொருளில் எழுத்தாளர் வே.மதிமாறன் ஆற்றிய உரையின் பகுதியை Periyar Vision OTT இல் கேளுங்கள். மனுதர்மம் வேதம் புராணம் இதிகாசம் போன்றவற்றில் நடந்த படுகொலைகளின் பின்னணி சமூக வர்ண நிலையினால்தான். மேல் வர்ணத்தானின் கல்வியை படிக்க முயற்சிக்கும் போது இது நடைபெறுகிறது. சத்திரியன் அல்லாத ஏகலைவன் வில்வித்தை கற்றால் கட்டை விரல் தண்டனையாக பெறப்படுகிறது.

கல்வி என்பது தவம். அந்த தவத்தை கீழ் வர்ண நிலையில் உள்ள சம்பூகன் செய்ததால் ராமனால் கொல்லப்படுகிறான். தனக்கு நிகராக வெள்ளை சட்டை அணிந்து கால்களில் செருப்பு போட்டு படி நிலையில் கீழே உள்ளவன் வந்தால் அவர்களுக்கு பிடிப்பதில்லை. கோவையில் சக்கிலிய சமூகத்தைச் சேர்ந்த நவீன கைப்பேசி பயன்படுத்தியதால் அவன் காது வெட்டப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடக்கவில்லை. மாறாக தன்னைவிட வசதி கூடுதலாக வீடும், தொலைக்காட்சியும் வைத்திருக்கிறார்களே என்று தாழ்த்தப்பட்டவர் வீடு இடிக்கப்பட்டது.

எந்தப் பகுதியில் பெரும்பான்மை ஜாதிக்காரர்கள் இருக்கிறார்களோ அங்கே உள்ள சிறுபான்மை தலித் சமூகத்தினர் மீது வன்முறை நிகழ்த்தப்படும். இதுதான் ஜாதிய உளவியல். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களாக உள்ள பிள்ளைமார்கள், கீழ் வர்ணத்தவர்கள் வரக்கூடாது என்பதற்காக சுவர் எழுப்பி இருந்தார்கள். தலித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களையே ஓர் ஊருக்கு உள்ளே விடவில்லை. ஜாதிய வன்முறைக்கு வட மாவட்ட பெரும்பான்மை வன்னியரோ தென் மாவட்ட கள்ளர்களோ மட்டும் காரணம் இல்லை. எந்த பகுதியில் பெரும்பான்மை இடைநிலை சூத்திர ஜாதி மக்கள் இருக்கிறார்களோ அவர்கள் படி நிலைக்கு கீழே உள்ள மக்களுக்கு எதிராக ஜாதிய வன்மத்தோடு செயல்படுகிறார்கள். தான் கும்பிடும் சாமியை தனக்கு இணையாக அவர்கள் கும்பிடக் கூடாது என்பவனுக்கு கடவுளும் கிடையாது, கடவுள் நம்பிக்கையும் கிடையாது. அதனால் கோயிலுக்கு பூட்டு போடுகிறான்.

சில சமயம் பெரியாரிஸ்டாக மாறவும் தயங்குவதில்லை முஸ்லிம் சக முஸ்லிம் அய் தொழுகைக்கு அழைக்கிறான். இங்கே இந்துவாக இருப்பவன் சக இந்துவை கோயிலுக்கு வரக்கூடாது என்கிறான். காரணம் ஜாதிய விரோதமும், பார்ப்பன ஆதிக்கமும் தான். சடங்குகளும் ஆச்சாரங்களும் எவன் ஒருவன் அதிகமாக செய்கிறானோ அவனே உயர்ந்தவன் என்று கற்பிக்கப்பட்டுள்ள நிலை அப்படியே இருக்கிறது. வர்ணாசிரமத்திற்கு வண்ண பெயிண்ட் அடிக்கத்தான் முடியுமே தவிர இந்து மதத்தை மாற்ற முடியாது. இன்னமும் முழுமையாக அறிய மணிமாறன் அவர்கள் உரையை இன்றே கேளுங்கள்.

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *