கருநாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது – ராகுல் காந்தி பேட்டி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

புதுடில்லி,மே14 – கருநாடக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து பேசிய ராகுல் காந்தி கருநா டகாவின் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருநாடக சட்டப்பேரவையின் மொத்த முள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில்  காங்கிரஸ் பெரும் பான்மைக்கும் அதிகமான பலத்தோடு ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்த நிலையில் கருநாடகா தேர்தலில் காங்கிரசின் வெற்றி குறித்து மூத்த தலைவர் ராகுல் காந்தி   செய்தியாளர்களிடம் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:

பெரும் முதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கருநாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக் கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெ டுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. கரு நாடகா மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதி களை கொடுத்திருந்தோம். முதல் அமைச் சரவை கூட்டத்திலேயே அந்த வாக் குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்த யுத்தத் தில் நாங்கள் வெறுப்பைக் கொண்டு சண்டையிடவில்லை. அன்பின் மூலம் சண்டையிட்டோம். இந்த தேசம் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை கருநாடக மக்கள் நிரூபித்துள்ளனர். மக்க ளுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன்.

-இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *