திண்டிவனம், நவ.3- 1.11.2025 சனிக்கிழமை மாலை 05:30 மணியளவில் திண்டிவனம் சுயமரியா தைச் சுடரொளி க.மு.தாஸ் இல்லத்தில் திண்டி வனம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் இர.அன்பழகன் தலைமை ஏற்று உரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் ச.அன்புக்கரசன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்டக் காப்பாளர் செ பரந்தாமன், மாவட் டச் செயலாளர் தா. இளம்பரிதி, மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பெருமாள், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா. தம்பி பிரபாகரன் ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத் தினையும் பெரியார் உலகம் திட்டத்தின் தேவையையும் அது அமைய வேண்டியது காலத்தின் தேவை என்பதனையும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
மேலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பெரியார் உலகம் திட் டத்தை முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தீர்மானம் 2013இல் திண் டிவனத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில்தான் நிறைவேற்றப்பட்டது என்கிற சிறப்பும் நமது மாவட்ட கழகத்திற்கு உண்டு எனவே பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி திரட்டி வழங்க வேண்டும் என்று விளக்கமாக உரையாற் றினார்கள்.
திண்டிவனம் நகர கழகத் தலைவர் உ .பச்சையப்பன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக மாவட்ட இளைஞரணித் தலைவர் மு.ரமேஷ் நன்றி கூறினார்.
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி தாஸ் பெரியாரியப் பற்றாளர் கே.பாபு, நகர இளைஞரணி தலைவர் ஓவியர் செந்தில் மகளிர் அணித் தோழியர்கள் இ. நிவேதா, த.தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு திண்டிவனம் மாவட்ட கழக சார்பில் நிதி திரட்டி டிசம்பர்-15 அன்று மாலை திண்டிவனத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டத்தை திண்டிவனத்தில் டிசம்பர்15 அன்று மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும். திண்டிவனம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
