பாஜக- தேர்தல் ஆணையம் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது செல்வப்பெருந்தகை

3 Min Read

சென்னை, நவ.3 தியாகராயர்நகரில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-

குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் தேர்தல் ஆணையம் மோசடியாக செயல்படுகிறது.பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது. நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது.

குடியுரிமை சான்றிதழை கொடு என்றால் என்னால் கூட தற்போது கொடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுக்கும் செயலில் இந்திய தேர்தல் ஆணையம்  – வைகோ

தமிழ்நாடு

சென்னை, நவ.3 சென்னை தியாகராயர்நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாட்டின் உரிமைக்கு பேராபத்து விளைவிக்கும். தமிழ்நாட்டின் நலன், உரிமைகளை பாதுகாப்பதற்காக சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம்.ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுக்கும் செயலில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6.50 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழ்நாட்டில் வந்து தங்கியுள்ளனர்.

இத்திருத்தம் காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் அபாயகரமான நிலை ஏற்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

சென்னையில் குப்பைக் கிடங்குகளில்

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்

தமிழ்நாடு

சென்னை, நவ.3 சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்புக் கிடங்கு களில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்கள்

இந்த மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கிளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் மூலம் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்து உள்ளது.

மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வர்களுக்கே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும். வழக்கமாக இந்த பொருட்கள் ஒன்றிய அரசின் நிறுவனம் மூலம் இணையம் முறையில் ஏலம் விடப்படும். ஆனால் இந்த முறையில் ஏலம் விடுவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதையடுத்து பழைய நடைமுறையை மாற்றியமைத்து இந்த புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

மண்டல குப்பை சேமிப்புக் கிடங்குகளில் இந்த பொருட்கள் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் உள்ள குப்பை சேமிப் புக் கிடங்குகளில் உள்ள பொருட்கள் இணையம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்வதற்கு தாமதம் ஆவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

பழைய பொருட்களை வாங்குபவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடிவதால் மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களை வேகமாக அப்புறப்படுத்த முடியும். பல மாதங்களாக தேங்கி கிடக்கும் பொருட்களை அகற்றுவதே இதன் நோக்கம்.

இந்த புதிய முறையில் பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், கண்ணாடி பொருட்கள், உலோகங்குள், அட்டைகள், மரம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவை தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக அனைத்து பரிவரித் தனைகளும் தூய்மை மிஷன் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்படும்.

இந்த மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களை பொருத்தவரை கைப்பேசி ரூ.80-க்கும், மடிக்கணினி ரூ.500-க்கும், குளிர் சாதனப் பெட்டி ரூ.800-க்கும், சலவை இயந்திரம் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படும். இந்த நடைமுறையானது இனி வரும் வாரங்களில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *