வடகிழக்கு பருவமழை ஒட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 16 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்களில் 6.75 லட்சம் பேர் பயன்பெற்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
பட்டம் பறிப்பு
இங்கிலாந்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டம் மன்னர் சார்லசால் பறிக்கப்பட்டது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட அத்தனை சலுகைகளும் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மடிக்கணினிகள்
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு விலை இல்லா மல் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 10 லட்சம் லேப்டாப்களை தலா ரூ.25,000 விலையில் வாங்கிட தமிழ்நாடு அரசு முடிவு.
