‘பார்ப்பனத் திமிர்!’
பீகார் மாநிலத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. விலங்குகள் கண்காட்சியகத்தில் விலங்குகளைப் பார்ப்பதைப் போல், பிரதமர் மோடியின் ஊடகங்கள் பீகாரில் படை எடுத்து வருகின்றன.
அதில் சித்ரா திரிபாடி என்ற பார்ப்பன ஊடகவியலாளர், பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பேட்டி எடுக்கச் சென்றார்.
அவர் மக்களைப் பேட்டி எடுக்கும் தோரணையே மேலே காண்பது! எதிரில் உள்ள பெண்கள் எதையோ கேட்டு கை நீட்டுகிறார்கள். ஆனால், அவரோ பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு, அவர்களைத் தொடாமல் விலகியே நிற்கிறார்.
இந்தப் படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி வருகிறது.
மோடி பாஜக, அதன் ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் சாமானியர்களுக்கானது அல்ல என்பது வெளிப்படை!
பொதுவாக ஊடக உலகம் பார்ப்பனர்கள் கையில் இருக்கிறது; அதுவும் வட மாநிலங்களில் கேட்கவே வேண்டாம்! அவாளின் ஏகப்போகக் குத்தகைதான்!
அதனால்தான் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்; யாரும் எதிர்பார்க்காத ஒன்று அது!
அந்தக் கேள்வி, பெரும்பான்மை பார்ப்பன ஊடகக்காரர்களி்ன நெஞ்சைப் பிளந்து, சுருக்கென்று தைத்திருக்கும்!
என்ன அந்தக் கேள்வி??
‘உங்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சி.?’ என்பதுதான் அந்தக் கேள்வி.
‘திருதிரு’வென்று முழித்தார்கள் –கேட்கப்பட்ட கேள்வியில் நூறு விழுக்காடு உண்மையும், நியாயமும் இருக்கும்போது, அவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்? அல்லது சொல்லத்தான் முடியும்?
அதனால்தான் செய்தியாளர்கள் எல்லாம் சங் பரிவார் பக்கம் நின்று, ஒன்றிய பி.ஜே.பி. அரசைத் தூக்கிப் பிடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
பீகாருக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரின் படத்தைப் பாருங்கள்! அதில் ஒரு திமிர் தெரியும்! பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்துக்கொண்டு, கேள்வி கேட்கும் தோரணை அல்லது மக்கள் சொல்லும் தகவலைக் கேட்கும் தோரணையைப் பார்த்தாலே பார்ப்பன ஆணவத்தின் கொக்கரிப்பு பளிச்சென்று தெளிவாகவே தெரியும்.
அவர்கள் என்ன பதிலைச் சொன்னால்தான் என்ன? படிக்காத பாமரர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து, ‘எஜமான்’ கொடுப்பதை வாங்கி, அன்றாடம் வயிறு கழுவுபவர்களாயிற்றே!
– மயிலாடன்
