தமிழ்நாட்டில் தங்கியுள்ள பீகார் தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பா? தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை, நவ. 2– பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணிகள் இந்த மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.தேர்தல் ஆணையம் இதுகுறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

2002–-2004ஆம் ஆண்டுகளில் கடைசியாக நடைபெற்ற சிறப்பு தீவிர பட்டியலில் பெயர் இருந்தால், அதனை தற்போதைய பட்டியலுடன் இணைத்து பார்த்து, பெயர் உறுதி செய்யப்பட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதுமானது.ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், தேர்தல் ஆணையத்தின் விண்ணப்பத்துடன் “இந்திய பிரஜை” என்பதற்கான அடையாளச் சான்று, பிறந்த தேதி மற்றும் வசிப்பிடச் சான்றுகளை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.இதற்காக தேர்தல் ஆணையம் 12 ஆவணங்களை ஏற்கக்கூடியதாக அறிவித்துள்ளது. அதோடு பீகார் SIR வாக்காளர் பட்டியலையும் சான்றாக இணைத்துள்ளது.

இது குறித்து கேள்வி எழுப்பிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியதாவது:

“பீகார் தேர்தல் பட்டியலுக்கும், தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ள SIRக்கும் என்ன தொடர்பு என்று தெளிவுபடுத்தப்படவில்லை. இது வாக்காளர்களுக்கு மட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சாதாரண குடியிருப்பு அளவுகோலின் அடிப்படையில் எந்தத் தகுதியும் இல்லாமல் பீகார் SIR பீகார் வாக்காளர்களை தமிழ்நாடு வாக்காளர்களாக சேர்க்கும் அடிப்படை ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படுமா? அப்படியானால் தகுதியற்ற பலர் இதில் சேர்க்கப்படலாம் என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: “இந்தியாவில் ஒருவருக்கு ஒரே இடத்தில்தான் வாக்குரிமை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அவரின் இருப்பிடச் சான்றின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். அதற்காகத்தான் 12 ஆவணங்களுடன் பீகார் SIR சேர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டி யலில் இடம்பெற விரும்பும் ஒருவ ரின் சரிபார்ப்புக்காக இதை இணைத் துள்ளோம்.  இதனால் தமிழ்நாட்டில் வேலை நிமித்தமாக வசிக்கும் பீகார் தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கம் இல்லை. வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விரும்புவோர், தேவையான ஆவணங்களை இணைத்தால்தான் அதைச் சரிபார்த்து சேர்ப்பதா அல்லது நிராகரிப்பதா என முடிவு செய்யப்படும். எனவே பீகார் தொழிலாளர்களை விருப்பத்துக்கு ஏற்ப வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது,” என அவர்கள் தெரிவித்தனர்.

“எனினும், அனைத்துக் கட்சி களும் இது குறித்துச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.”

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *