வாசிங்டன், நவ.2– அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது.
இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத் திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெ ரிக்கா தெளிவுபடுத்தியது.
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவ னங்கள் வெளிநாட்டு ஊழி யர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணிய மர்த்த உதவியது. ஒவ் வொரு ஆண்டும் அனு மதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிக மானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர் களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல் வெளிநாட்டினருக் கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறை முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதி காரிகள் அறிவித்தனர்.
இதுவரை, வெளிநாட்டி னர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் புதுப்பித்தல் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் காலத்தில், 540 நாட்கள் வரை தங்கள் வேலையைத் தொடரலாம்.
ஆனால் புதிய விதியின் கீழ், தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீ கார ஆவணங்கள் காலாவதியாகும் முன் புதுப்பித்தல் பெறாத எவரும் உடனடியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப் பத்தை முறையாக தாக்கல் செய்வதன் மூலம் வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க இயலும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதுப்பித்தல் நட வடிக்கைக்கு 3-12 மாதங்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் இந்த முடிவு அங்கு பணி புரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உரு வாக்கியுள்ளது.
