ரூ. 8,300 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு

கெய்ரோ, நவ. 2– எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிக மான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் ‘கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் மன்னர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை “மனித கலாச்சாரம் மற்றும் நாகரிக வரலாற்றில் ஒரு விதி விலக்கு” என்று எகிப்து அதிபர் அலுவலகம் பாராட்டியுள்ளது. இது ஒற்றை நாகரிகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சி யகத்தில் பண்டைய எகிப்தின் வாழ்க்கையை விவரிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகம் கெய்ரோவிற்கு வெளியே, 3 பிரமிடுகள் மற்றும் ஸ்பிங்க்ஸ் ஆகியவை அமைந்திருக்கும் கிசா பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், 2014ஆம் ஆண்டு எகிப்து அதிபராக அப்தெல்-பத்தா எல்-சிசி பதவியேற்றபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங் களில் ஒன்றாகும். சுமார் ரூ.8,300 கோடி மதிப்புள்ள இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் 2005இல் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் காரணங்களால் கைவிடப்பட்டது.

தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், அருகிலுள்ள பிரமிடுகளைப் போலவே உயர்ந்த, முக்கோண கண்ணாடி முகப்பைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 24,000 சதுர மீட்டர் (2,58,000 சதுர அடி) நிரந்தர கண்காட்சி இடம் உள்ளது. மன்னர் துட்டன் காமூனின் சேகரிப்பில் இருந்து எடுக்கப்பட்ட 5,000 கலைப்பொருட்களுக்காக 2 அரங்குகள் அர்ப்பணிக்கப் பட்டுள்ளன. ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டரால் 1922ஆம் ஆண்டு துட்டன்காமூனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கிடைத்த பொருட்கள் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும், அருங்காட்சியகத்தை பிரமிடுகளுடன் இணைக்கும் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அவற் றுக்கிடையே கால்நடையாகவோ அல்லது மின்சார வாகனங்கள் மூலமாகவோ செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது. அருங் காட்சியகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அருகிலுள்ள கிசா பிரமிடுகளையும் எகிப்து அரசு புதுப்பித்துள்ளது. அருங் காட்சியக வாயில்களுக்கு வெளியே ஒரு மெட்ரோ நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கெய்ரோ நகரத்திற்கு மேற்கில், அருங்காட்சியகத்தில் இருந்து 40 நிமிட தூரத்தில் ஸ்பிங்க்ஸ் பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *